JB பாஷா பாய்
எங்க ஊர்ல உள்ள ஒரு நபரை பத்தி எழுதலாம் என்று நினைக்கிறேன். அவரை பத்தி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஆளவந்தான் கமல் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்றால் இவர் எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று சொல்லலாம்.
வஹ்ஹாபிகள் தலையெடுத்த புதிதில் இவரிடம் தர்ஹாக்கு நீங்க ஜியாரத்துக்கு போவீங்களா? என்ற கேள்வியை கேட்ட போது “தர்ஹாக்கு நான் போ மாட்டேன்.. அதாவது ’பத்தி’யோட (ஊதுவர்த்தி) போ மாட்டேன் ’பக்தி’யோட போவேன்” என்று வஹ்ஹாபிகளையே குழப்பினவர் அவர்.
அதெல்லாம் சரி, அவர் எப்படி எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று நீங்கள் கேட்கலாம்..?
அதற்கான விடை இதோ:
நான் சொல்ல வரும் இந்த நபரின் வாப்பா பெயர் ஜானி - நாகூரார்க்ளுக்கு ஞாபகம் இருக்கலாம், ஒரு காலத்தில் இவர்கள் தான் நாகூரில் நடக்கும் பெரும்பாலான எல்லா நிகாஹுக்கும் ரோக்கா கொடுப்பார்கள் இப்பொழுது மர்ஹும் - நான் சொல்ல வரும் நபர் பெயர் பாஷா, அதை அப்படியே சுருக்கி ஜே.பி. அதாவது ஜானி பாஷா.
இது எப்படி எம்.ஜி.ஆர். மாதிரி ஆகும் என்றால், ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் ஜே.பி. அதனால இவர் எம்.ஜி.ஆரில் பாதி...
அடுத்து ரஜினியை பார்ப்போம்..
அவர் குடிச்சிட்டு வந்து குஞ்சாலி மரைக்காயர் தெரு முனையில் உள்ள யுனுஸ் நானா கடைக்கிட்டே ஒரு முறை தவறி விழுந்து விட்டார். தூக்க போன சிலரின் கையை உதறி விட்டு தானாகவே சிரமப்பட்டு எந்திரிச்சு ஒத்த வெரலை பாஷா படத்தில் வரும் ரஜினி மாதிரி உசத்தி காட்டி “நான் ஒரு தடவ உழுந்தா நூறு தடவ உழுந்த மாதிரி”ன்னு சொன்னார். அவர் பெயரும் பாஷா தானுங்களே..
So, நான் சொல்ல வரும் So and So எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து வைத்த கலவை தானே..?

Comments