Posts

Showing posts from December, 2008

பள்ளிகூடத்தில்..

பசுமை நிறைந்த பள்ளி பருவங்களை மறக்கத் தான் முடியுமோ?, எங்க ஊரில் பள்ளிகூடத்தில் நடந்த சில கலாட்டாக்கள்... எங்க ஊரு ஆசாமி ஒருவர் (நாந்தான்னு நினைக்கிறேன்) தொப்பி (அதாங்க முஸ்லிம்கள் தொழுகையின் போது அணியும் குல்லா என்றால் விளங்கும் தானே - (அல்லாஹ்வே! தொழுகையின் போது குல்லா அணிய தேவை இல்லை என்று யாராவது ஒரு சகோதரர் ஹதீதை கொண்டு வராமல் இருக்க வேண்டுமே!) - )அணிந்து கொண்டு பள்ளிகூடத்திற்கு போய் விட்டார், ஒரு மாற்று மத சகோதரர், 'நீங்க இப்படி தொப்பி போட்டுட்டு ஸ்கூலுக்கு வர்ரீங்களே?, இப்படி வரக்கூடாது.. இது மத உணர்வை ஏற்படுத்துது" என்று மிகுந்த நல்லெண்ணத்துடன் சொல்லி வைக்க, நம்ம ஊர் ஆசாமி, "அப்ப நீங்க ஏன் திருநீறு பூசிட்டு வர்ரீங்க.. இது மத உணர்வை ஏற்படுத்தாம மத நல்லிணகத்தையா ஏற்படுத்துது..?" என்று ஒரு போடு போட்டாரே பாருங்கள்.. அந்த சகோதரர் கேட்ட அடுத்த கேள்வி என்னான்னு நினைக்கிறீங்க, "இந்த குல்லா எங்க வாங்குனீங்க, நல்லா இருக்கு.." ------------------------------------------------------------------------ ஆண்டவர் தியேட்டரில் ஒரு படம் மாற்றினால் அந்த படத்த