Posts

Showing posts from 2009

தொழுவாளி..

எங்க ஊர்ல சின்ன வாண்டுகள்லேந்து பெரிய ஜியாண்டுகள் வரைக்கும் வாய் பேச்சு கிழியும் என்பது ஊரறிந்த உலகறிந்த செய்தி. ஆனா எனக்கு தெரிந்த ஒருத்தர் ரொம்பவும் வித்தியாசமானவர், அவர் ரொம்ப அதிகப்படியா பேசுன வாத்தையே அஸ்ஸலாமு அலைக்கும் தான். அதுக்கு மேல யார்கிட்டேயும் அவர் பேசுனதே இல்லை. அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பார். தாடைல தாடி, தலைல தொப்பி, எப்போதும் வெள்ளை அரபி டிரஸ். ஒரு வக்துக்கு விடாம தொழுவ போறது. காட்டுபள்ளிக்கு அவர் ஊரில் இருந்த காலத்துல ஒரு சுபுஹ கூட தவற விட்டது கிடையாது. அப்படியாபட்டவருக்கு காட்டுபள்ளியில அஸர் தொழுகைக்கு பிறகு நிகாஹ் நடந்தது. ரொம்ப ரொம்ப சிம்பிளான நபி வழி திருமணம். விஷயம் இது தான் அஸருக்கு பிறகு திருமணம் முடிந்து வீட்டுக்கு போனவர், மக்ரிப் பாங்கு சொல்றதுக்கு முன்னாடி எப்போதும் போல காட்டுபள்ளிக்கு தொழுவ கிளம்பிட்டார். இதை பார்த்த எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா போயிடுச்சு, என்னடா இது அவனவன் கல்யாணம் முடிச்சுட்டு நாப்பது நாளைக்கு ரூம விட்டு வெளிய வரமாட்டான், பொண்டாட்டியோட ரூம்லய சில்லா இருப்பான், அஸருக்கு இந்த பக்கமா வீட்டுக்கு போனார், மக்ரிபுக்கு அந்த பக்கம

நாகூர் ஆண்டவர் தியேட்டரில் கொடுக்கும் அதிரடி விமர்சனம்

படம்: தாலாட்டு பாடவா எடுத்ததுமே அம்மாவுக்கு உடம்பு முடியாமல் இருக்கும், டாக்டரை கூப்டுங்கம்மா என்று படத்தில் சொல்வார்கள். நாகூரார்கள் கமெண்ட்: ராவுஜி கம்பவுண்டரையாவது கூப்டுங்க படம்: தாய் மொழி சரத்குமார் வாசற் படியில் முட்டிக் கொள்வார், அதை தொடர்ந்து நீண்ட பிளேஷ் பேக் காட்சிகள். சரியான போரடிக்கும் காட்சிகள் நாகூரார்கள் கமெண்ட்: மறுபடியும் முட்டிக்காதே

டி.ஆர்.. தோத்தார்..

கம்பன் எக்ஸ்பிரஸில் எக்மோரில் எறங்குனதோட குபுகுபுன்னு ஆட்டோ ஓட்டுறவங்க எல்லாம் தர்ஹால சோத்து சீட்டு வாங்குற மாதிரி கூடிட்டாங்க.. அதுலேந்து ஒருத்தர தேர்ந்தெடுத்து அவர் பின்னாடியே போன ஒடனே ஆட்டோ காரர் கேட்டார், "எங்க சார்..?" என்று நம்ம ஊர் ஆளு இப்படி கேட்டிருக்காஹா, "ஆட்டோ.. இங்கேந்து டிரிப்ளிகேனுக்கு போறதுக்கு என்ன ரேட்டோ?" (விஜய) டி.ஆர். தோத்தார்

சஹனுக்கு டிக்கெட்

ஒரு தடவை நாகூராளு ஒருத்தரு நாகப்பட்டினத்துல கல்யாணம் பண்ணுனார். எங்க ஊர்லேந்து ஒரு 8 பேர் போல பஸ்ஸுல கிளம்பி போனாஹல்வோ. கைலியும் தொப்பியுமா பஸ்ஸுல ஏறுனதோடவே கண்டக்டர் கேட்டுட்டார், "என்ன கல்யாணமா? சாப்பாடா? பிரியாணியா?, சரி, சரி, எத்தனை பேரு"ன்னு.. அதுக்கு நம்ம பேச்சுவாயன், "ரெண்டு சஹனுக்கு டிக்கெட் கொடுங்க" என்று கேட்டார். சஹன்னா என்னான்னு தெரியும் தானே, நாலு பேர் ஒண்ணா ஒக்காந்து சாப்புடுற பெரிய மரவ (தட்டு).

அறுவை

மீசையை சரி செய்கிறேன் என்று குரங்கு பங்கு பிரிச்ச கதையா இடது பக்கம் அதிகமாகி விட்டது என்று வலது பக்கம் சரி செய்ய வலது பக்கம் குறைந்து விட்டது என்று இடது பக்கம் சரி செய்ய இப்படியே சரி செய்து செய்து ஹிட்லர் ரேஞ்சுக்கு வந்து விட்ட மீசையை பார்த்தவுடன் இவருக்கு மூக்குக்கு கீழே கோபம் வந்தது. அதே கோபத்தில் முழுதுமாக வழிக்கிறேன் என்று கடுப்பில் இழுத்திருக்கிறார். மீசையோடு கொஞ்சூண்டு சதையையும் அறுத்து விட்டிருந்தார். அன்று ஹஜ் பெருநாள். பள்ளியில் சந்திக்கும் போது மூக்குக்கு கீழே அறுத்திருப்பதை பார்த்த நண்பர் ஒருவர் இப்படி கமெண்ட் அடித்தார், "என்னாங்கணி, குர்பானிக்கு ஆட்ட அறுக்க சொன்னா நீம்பர் உம்பர் சதயவே அறுத்துக்கிட்டு வந்திருக்கீயோம்.. அவ்வளவு இபாதத்"

நண்பரின் கோபம்

நாகூர் நண்பர் ஒருவர் சிங்கையில் நிரந்தரவாச விசா (PR - Permanent Resident) வைத்திருந்தார். அப்போது அவர் மனைவியை சிங்கையில் சாதாரண விசாவில் (tourist visa) அழைத்து வந்திருந்தார். குறிப்பிட்ட நாள் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது. மனைவியை நிரந்தரமாக சிங்கையில் தங்க வைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தார். அப்போதெல்லாம், விசா வாங்குவது மிக மிக கடினம், சிங்கப்பூர் குடிநுழைவு துறை அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. கடும் வருத்தத்திலும், கோபத்திலும் என்னை சந்தித்த அவரை தேற்றினேன். அந்த கட்டத்தில் எனது இன்னொரு நண்பர் அந்த இடத்திற்கு வந்தார். வந்த நண்பரிடம் இந்த நண்பரை அறிமுகப்படுத்தினேன். வந்த நண்பர் கேட்ட முதல் கேள்வியே இது தான், "familyயோட இருக்கீங்களா..?" மனைவியின் விசா கிடைக்காமல் கோபத்தில் இருந்த நண்பர் இப்படி பதில் சொன்னார், "இல்ல பே முழியோட இருக்கிறோம்.." என்று

ரெக்கார்ட் நோட் காணாமல் போனதற்கு கற்பிக்கப்பட்ட நியாயங்கள்

நாகூர் ஆண்டவர் தியேட்டரில் விக்ரம் படம் எடுத்திருந்தார்கள். பள்ளிகூடத்திற்கு போகாமல் படத்திற்கு போன ஒரு பிள்ளையாண்டான் ரெக்கார்ட் நோட்டை தொலைத்து விட்டான். அடுத்த நாள் ரெக்கார்ட் நோட்டை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும், அப்போது தான் அவனுக்கே தெரிந்தது, ரெக்கார்ட் நோட் காணாமல் போய் விட்டது என்று. கொஞ்சம் கூட பதட்டப்ப்டவில்லை. "நேத்து பட கொட்டாய்ல (ஒழுங்காக படிக்கவும் - சினிமா கொட்டகையை தான் பிள்ளையாண்டான் இந்த அழகுல சொல்றான்) தான் காணா போயிருக்கும்னு நெனைக்கிறேன்" என்று அலட்சியமாக கூறினான் வாத்தியார் வந்தார். எல்லோரையும் சமர்ப்பிக்க சொன்னார், எல்லோரும் எழுந்து போய் வாத்தியாரின் மேசையில் வைத்து விட்டு வந்தார்கள், "யார் இன்னும் வக்கல..?" என்று கேட்டார், நம்ம பய எழுந்து, "நான் வக்கல சார்" என்றான் "ஏன் வக்கல..?" "காணா போய்டுச்சு சார்.." என்றான் "ஏண்டா காணாடிச்சே?" என்று கேட்டார் அதற்கு, "அதுக்கு என்னா சார் செய்றது, விக்ரம் படத்துல இந்தியாட ராக்கெட்டே காணா போயிடுச்சு" என்று நியாயம் பேசினான் அவன் சொல்றதும் ந