நல்லவரா? கெட்டவரா?
"கீர.. கீர.." தலை தெறிக்கிற வெயில்ல தொண்டை தண்ணி வத்த கத்தி கத்தி பொழப்பை நடத்த நடையை கட்டி கொண்டிருந்தார் அந்த பெண்மணி. ஒரு வீட்டு வாசலில் நின்று "ஏம்மா.. கீரை வேணுமாம்மா.. " என்று பல முறை கேட்டு கத்தியிருக்கிறார். வாசல் கதவு திறந்திருந்தது... உள்ளேயிருந்து 'வேணும்' 'வேணாம்னு' ஒரு பதிலும் இல்லை.. சிறிது நேரம் நின்று பார்த்தார்.. 'இது சரிப்பட்டு வராது' என்று நடையை கட்ட ஆரம்பித்து விட்டார்.. தெரு முனைக்கு வந்து விட்டார்.. அவர் நின்று கேட்ட அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த அந்த துப்பட்டி 'இந்தாம்மா.. கீரை காரம்மா..' என்று கத்தி கூப்பிடவே.. தெரு முனை திரும்பிய அவர் திரும்பி ஓட்ட நடையுடன் கீரை கூடையை சுமந்த படி வந்து வீட்டு வாசலில் கூடையை இறக்க, அந்த வீட்டு பெண்மணி, 'செத்த மிந்தி வந்தப்போ குளிச்சிட்டு இந்தேன்.. கேட்டது காதுல வுழுந்துச்சு.. ஒடனே ஓடி வந்து சொல்ல முடியல.. மன்னிச்சுக்கம்மா.. கீர இப்போ வாணா(வேண்டாம்)ன்னு சொல்ல தான் கூப்ட்டேன்..' - அந்த பெண்மணி நல்லவரா? கெட்டவரா?