சட்டை புடிக்குதுன்னா என்னா அர்த்தம்

எங்க வாப்பாவும் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களும் ஒன்றாக படித்தவர்கள். நெருங்கிய தோழர்கள். என்றாலும், நான் இஜட். ஜபருல்ல்லாஹ் அவர்களை "தோழாப்பா" என்று அழைத்தது கிடையாது. "ஜபருல்லாஹ் நானா" என்று தான் அழைத்து வந்திருக்கிறேன். எங்க வாப்பா இவர்களின் நகைச்சுவை உணர்வை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

நண்பர் ஒருவருக்காக அவர் வைத்திருந்த துணி கடையில் ஜபருல்லாஹ் நானா அவர்கள் நின்று வியாபாரம் செய்து கொடுப்பது வழக்கம்.

அப்படி ஒரு முறை கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, ஜபருல்லாஹ் நானா அவர்களிடம் சட்டையை வாங்க வந்த ஒருவர், 'இத போட்டு பாக்கலாமா?" என்று கேட்டிருக்கிறார்.

"பாருங்களேன்.." என்று சொல்லபட்டிருக்கிறது

சட்டையை போட்டு பார்த்திருக்கிறார், உடம்பை இறுக்கி பிடித்து ரொம்ப பி(f)ட்டாக இருந்திருக்கிறது. ஒருவர் சட்டையை இறுக்கமாக போட்டிருந்தால் நாம்,"உடம்ப பி(f)ட்டுனு புடிச்சுகிட்டு இருக்குன்னு" சொல்வது வழக்கம்.

அவர் உடனே, "புடிக்கிதுங்க.." என்று சொல்லியிருக்கிறார்

அதற்கு ஜபருல்லா நானா அவர்கள், "புடிக்கிதுன்னா இதையே எடுத்துக்குங்க.." என்று சொன்னது தான் தாமதம் கடை சிரிப்பில் கலகலத்து விட்டது.

Comments

\\அதற்கு ஜபருல்லா நானா அவர்கள், "புடிக்கிதுன்னா இதையே எடுத்துக்குங்க.." என்று சொன்னது தான் தாமதம் கடை சிரிப்பில் கலகலத்து விட்டது.\\


ஹி ஹி ஹி
nagoreismail said…
ஹி ஹி க்கு நன்றி

Popular posts from this blog

முதல் இரவு கலாட்டா

பள்ளிகூடத்தில்..

மைத்தாங்கொல்லை