வெளியூரா..?

அறிமுகம் இல்லாத ஒருவரை நம் ஊரில் பார்த்து பேசினோம் என்றால் பெரும்பாலும் முதல் கேள்வியாக "நீங்க வெளியூரா..?" என்ற கேள்வி தான் அமையும். 'ஆமாங்க எப்படி கண்டுபுடிச்சீங்க..?" என்று தொடர்ந்து பதிலாக வரும் கேள்விக்கு, "முழிக்கிற முழியை வச்சு தான்" என்று இன்னொரு பதிலை சொல்லி பே முழி முழிக்க வைப்பார்கள். இது பொதுவாக எல்லா ஊரிலும் நடக்கிறது தான்.

எங்க ஊர் வாசி வெளியூர் போய் படித்து விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். சரியான பஜர் நேரம் அது. தெரு முனையில் இருந்த கடையில் பெட்டியுடன் தேத்தணி வாங்கி குடித்து கொண்டிருந்த அவரிடம் கடைகாரர், "வெளியூரா..?" என்று கேட்டதற்கு, 'என்னது, வெளியூறா? நான் உள்ளூர் தாங்க" என்று பாய்ந்திருக்கிறார் - அதாவது கேட்டவருக்கு இவரை ஊர் வாசி என்று நன்றாகவே தெரியும், இவர் கேட்டது "வெளியூருக்கு போறீங்களா?" அல்லது "வெளியூரிலிருந்து வருகிறீர்களா?" என்று அர்த்தத்தில். ஆனால் நம்மவர் அதை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்.

Comments

Popular posts from this blog

முதல் இரவு கலாட்டா

பள்ளிகூடத்தில்..

மைத்தாங்கொல்லை