Posts

Showing posts from November, 2008

கல்யாண கலாட்டா

ஒரு விபரமும் தெரியாதவர்களை எங்க ஊரில் "பேயன்" என்று மரியாதையாக (?) அழைப்பது வழக்கம். அப்படி ஒருவர் தனக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாகவும் எப்படி எப்படி நடந்துக்கணும் என்றும் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு குரூப்பிடம் தெரிவித்திருக்கிறார். அந்த கொடுமைக்காரர்கள், 'ஓய் ரொம்ப முக்கியம், கையழைச்சு வுட்டவொடனே, பொண்ணுட கைய புடிச்சிட்டு நல்ல சத்தமா மூணாம் கலிமாவ மூணு தடவ ஓதணும்.., அப்புறம் தாலி கட்டு அது இதுன்னு எல்லாம் முடிஞ்சு அறைக்குள்ள பொண்ணு வந்தவொடனே.." என்று நிறுத்தியிருக்கிறார் "சொல்லுங்கணி, பயமா இருக்கு" என்று திட்டுகட்டு போய் கேட்டிருக்கிறார் அந்த மரியாதைக்குறியவர் "அட போங்கணி, இப்ப அஞ்சாம் கலிமாவ அஞ்சு தடவ ஓதணும்.." என்று கூறியிருக்கிறார் "அல்லாஹ்வே.. நான் என்னா செய்வேன், இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது" என்று புலம்ப ஆரம்பித்து இருக்கிறார் "ஏன்?" என்று ஆச்சர்யப்பட்டு கேட்க "எனக்கு மூணாம் கலிமாவும் தெரியாது, அஞ்சாம் கலிமாவும் தெரியாது, கலிமா தெரியலைன்னா கல்யாணம் பண்ண முடியாதுன்னு (இதையே தலைப்பா வச்சிருக

கேள்வியும் பதிலும்

எங்க ஊர்லங்க, ஒழுங்கா பள்ளிவாசலுக்கு தொழுவ போறவன் கூட தப்லீக் ஜமாத் பள்ளிவாசலுக்கு வந்துட்டாஹன்னா, அந்த பள்ளி பக்கமே போவ மாட்டாங்க, என்ன செய்றது?, காலம் அப்படி இருக்கு! இந்த பதிவு தப்லீக் ஜமாத் செய்வது சரியா? தவறா? என்று போலீஸ், வக்கீல் மாதிரி ஆதாரத்தை எடுத்து வைத்து பேசும் பதிவு அல்ல. இந்த பதிவு தப்லீக் ஜமாத்தார்கள் எங்க ஊர்வாசிகளை தொழுகைக்கு அழைத்த போது அவர்களுக்கு கிடைத்த பதில்கள் பற்றியது. ----------------------------------------------------------------- "பள்ளிவாசலுக்கு வாங்க.." "என்ன இப்படி சொல்லிட்டீங்க, நான் தான் கண்டிப்பா வருவேனே" "எப்போ?"" "பெருநாக்கு (ஹி.. ஹி..)" ------------------------------------------------------------------ "பள்ளிவாசலுக்கு வாங்க" "பார்க்கறேன்" "அப்படி சொல்ல கூடாதுங்க, நம்ம மௌத் எப்பன்னு நமக்கு தெரியுமா?" (பதில் சொன்னவர் இப்போது ஹயாத்தோடு இல்லை) "அது எப்டிங்க தெரியும், அது தெரிஞ்சா தான் அவனவன் தன்னையே "அல்லாஹ்"ண்டுடுவானே" "அஸ்தக்பிருல்லாஹ

நாகூர் அம்ஜத்கான்

விக்ரம் படம் நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் ஓடிய போது அம்ஜத் கான் அறிமுகமான காட்சியில் இஹ பேரை சொல்லி தான் தியேட்டர்ல கத்துனான்வோ. இஹ என்று நான் குறிப்பிட்டிருக்கும் அந்த நபர் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும், இ(ஹ)வர்கள் பள்ளிவாசலில் பயான் செய்யும் போது ஒரு சம்பவம் நடந்தது. பொதுவாக இன்னைக்கு பயான்ங்குறது நரகத்த சொல்லி பயமுறுத்துறது இல்லைன்னா சொர்க்கத்துக்கு ஆசை காட்டறது இந்த நிலையோட நின்று விடுகிறது. அப்படி தான் ஒரு முறை ஆவேசமாக, 'தொழுவுனீங்க.. உங்கள "வாங்க வாங்க"ன்னு சொல்லி சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போவாங்க, தொழுவல.. உங்கள "தர தர"ன்னு நரகத்துக்கு இழுத்துட்டு போவாங்க" என்று எச்சரித்ததும், "அப்ப எங்களுக்குல்லாம் "வாங்க வாங்க"வா? இல்ல "தர தர"வா" ண்டு ஒருத்தர் குழப்பத்தோடு கேட்க கோபத்துல நாகூர் அம்ஜத்கான் "தூ"ன்னு காரி துப்பிட்டாஹலாம் அஹலுக்கு "வாங்க வாங்க" கிடைக்கணும்னு இந்த நேரத்துல நான் துவா செஞ்சுக்கிறேன்.

சட்டை புடிக்குதுன்னா என்னா அர்த்தம்

எங்க வாப்பாவும் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களும் ஒன்றாக படித்தவர்கள். நெருங்கிய தோழர்கள். என்றாலும், நான் இஜட். ஜபருல்ல்லாஹ் அவர்களை "தோழாப்பா" என்று அழைத்தது கிடையாது. "ஜபருல்லாஹ் நானா" என்று தான் அழைத்து வந்திருக்கிறேன். எங்க வாப்பா இவர்களின் நகைச்சுவை உணர்வை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். நண்பர் ஒருவருக்காக அவர் வைத்திருந்த துணி கடையில் ஜபருல்லாஹ் நானா அவர்கள் நின்று வியாபாரம் செய்து கொடுப்பது வழக்கம். அப்படி ஒரு முறை கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, ஜபருல்லாஹ் நானா அவர்களிடம் சட்டையை வாங்க வந்த ஒருவர், 'இத போட்டு பாக்கலாமா?" என்று கேட்டிருக்கிறார். "பாருங்களேன்.." என்று சொல்லபட்டிருக்கிறது சட்டையை போட்டு பார்த்திருக்கிறார், உடம்பை இறுக்கி பிடித்து ரொம்ப பி(f)ட்டாக இருந்திருக்கிறது. ஒருவர் சட்டையை இறுக்கமாக போட்டிருந்தால் நாம்,"உடம்ப பி(f)ட்டுனு புடிச்சுகிட்டு இருக்குன்னு" சொல்வது வழக்கம். அவர் உடனே, "புடிக்கிதுங்க.." என்று சொல்லியிருக்கிறார் அதற்கு ஜபருல்லா நானா அவர்கள், "புடிக்கிதுன்னா இதை

சோடா கலர்

கல்யாணம், காது குத்து, சுன்னத் என்றால் அதை வீடியோ எடுப்பார்கள். பொதுவாக எங்கள் ஊரில் எல்லா வீட்டு விசேஷங்களுக்கும் நாகூர் சேத்தான் அவர்கள் தான் வீடியோ பதிவு செய்வார்கள். அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் அவர் பதிவு செய்த காட்சிகள் மட்டுமல்ல சில நகைச்சுவைகளும் நம்மிடையே உள்ளது. அவர்கள் ஒரு முறை நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது இடைவேளையில் ஒருவர் 'சோடா கலர், சோடா கலர்.." என்று திரும்ப திரும்ப கூறி விற்று கொண்டு வந்தார். சேத்தான் நானா அவரை கூப்பிட்டார்கள், 'என்னா நானா?" என்று அவரும் வந்திருக்கிறார். சேத்தான் நானா, "சோடா கலர் இல்லை தம்பி அது வெள்ளை" என்று சொல்லியிருக்கிறார்கள்.

வெளியூரா..?

அறிமுகம் இல்லாத ஒருவரை நம் ஊரில் பார்த்து பேசினோம் என்றால் பெரும்பாலும் முதல் கேள்வியாக "நீங்க வெளியூரா..?" என்ற கேள்வி தான் அமையும். 'ஆமாங்க எப்படி கண்டுபுடிச்சீங்க..?" என்று தொடர்ந்து பதிலாக வரும் கேள்விக்கு, "முழிக்கிற முழியை வச்சு தான்" என்று இன்னொரு பதிலை சொல்லி பே முழி முழிக்க வைப்பார்கள். இது பொதுவாக எல்லா ஊரிலும் நடக்கிறது தான். எங்க ஊர் வாசி வெளியூர் போய் படித்து விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். சரியான பஜர் நேரம் அது. தெரு முனையில் இருந்த கடையில் பெட்டியுடன் தேத்தணி வாங்கி குடித்து கொண்டிருந்த அவரிடம் கடைகாரர், "வெளியூரா..?" என்று கேட்டதற்கு, 'என்னது, வெளியூறா? நான் உள்ளூர் தாங்க" என்று பாய்ந்திருக்கிறார் - அதாவது கேட்டவருக்கு இவரை ஊர் வாசி என்று நன்றாகவே தெரியும், இவர் கேட்டது "வெளியூருக்கு போறீங்களா?" அல்லது "வெளியூரிலிருந்து வருகிறீர்களா?" என்று அர்த்தத்தில். ஆனால் நம்மவர் அதை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்.

பராட்டா உருண்டை

குஞ்சாலி மரைக்காயர் தெரு முனையில் சின்னதா ஒரு அடுப்பு வச்சு அதுல பொறிக்கன் சட்டிய வச்சு மைதா மாவ உருண்ட புடிச்சு சட்டில போட்டு பொறிச்சு சுடச்சுட காட்சி தரும் பதார்த்தத்தை கிட்டதட்ட நாகூரில் இருக்கும் எல்லா நாவுமே ருசி பார்த்திருக்கும். பரோட்டா உருண்டய பத்தி தெரியாதஹலே இருக்க முடியாது. எங்க மாமி ஒருத்தர் அவரிடம் பணிபுரியும் ஒரு நபரிடம் "கடக்கி போய் பராட்ட உருண்ட 10ரூவாய்க்கி வாங்கிட்டு வாரும்" என்று சொல்ல - அவர் மியா தெரு முனைக்கி போய் தஸ்தகீர் பாய் கடையில போய் பராட்டா ரொட்டி சுடுறதுக்கு முன்னாடி உருண்ட புடிச்சி வச்சிருப்பாஹல்ல அந்த பராட்டா உருண்டய காட்டி, 'பராட்டா உருண்ட 10 ரூவாய்க்கி தாங்க" என்று கேட்டிருக்கிறார். கடயில இருக்குறஹ கொழம்பி போய் 'ஓய் என்னாங்கணி சொல்றீயோம், இந்த உருண்டய யாருமே கேக்க மாட்டாஹலேங்கனி' என்று சொன்னதற்கு, "இது தான் கேட்டாஹா, நான் தான் காசு தர்ரேன்ல, நீங்க கேக்குறத கொடுக்க வேண்டியது தானே" என்று நல்லவிதமாக எடுத்து சொல்லியிருக்கிறார். நமக்கு ஏன் வம்புன்னு அதே உருண்டையை பையில அடைச்சு கடைகாரர்கள் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.