Posts

Showing posts from August, 2008

குழந்தையின் வயது

குரான் ஓதி கொடுக்கும் சாபு ஒருவர் வாஞ்சூர் (நாகூரின் எல்லையில் இருக்கும் பாண்டிச்சேரி மாகாணத்தை சேர்ந்த ஊர், டாஸ்மார்க் சமாச்சாரங்களுக்கு பிரசித்தம்)சென்று பஜர் (அதிகாலை நேர தொழுகை) தொழுது விட்டு ஜியாரத் (புனிதமான இடங்களை சந்திப்பது) செய்து விட்டு திரும்பும் வழியில் ஒரு வீட்டு வாசலில் நண்பர் இருக்கவே அவரிடம் சலாம் சொல்லி பேசியிருக்கிறார். அந்த வீட்டுக்குறிய நண்பர் 'வூட்டுக்கு வந்துட்டு போங்க' என்று வற்புறுத்தவே உள்ளே சென்று இருக்கிறார். பச்சை குழந்தை அழும் சத்தம் கேட்டு இருக்கிறது, சாபு உடனே, 'யார்ர கொழந்த?' என்று கேட்டிருக்கிறார், அதற்கு அவர், 'தங்கச்சி கொழந்த சாபு' என்று சொல்ல 'எத்தனை மாசம்?' என்று எதார்த்தமாக கேட்டு வைக்க அவர், 'பத்து மாசம் இருக்குமே..' என்று பதிலளித்திருக்கிறார். அதன் பிறகு சிறிது பேசி விட்டு 'அப்ப வர்ரேன்' என்று விடைபெற்ற அந்த சாபு தெரு முனை வரைக்கும போய் விட்டார் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த அவர் (அதான் அந்த வீட்டிற்குறிய நண்பர் என்று எழுதியிருந்தேன்ல அவரே தான்), 'சாபு, சாபு' என்று கைதட்டி கத

உண்டியல்

கப்ருகள் இல்லாத தர்காக்களை கூட பார்க்கலாம், ஆனால் உண்டியல் இல்லாத தர்காக்களை மட்டும் பார்க்கவே முடியாது. உண்டியல் மட்டும் இல்லை என்றால் இன்னும் பல பேர்கள் வஹ்ஹாபிகளாக (தர்கா மறுப்பாளர்கள்) மாறியிருக்க கூடும். இந்த உண்டியல் எல்லோர் மனதிலேயும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு ஹஜ் பயணாளி ஒரு பெண்மணியிடம், 'நான் ஹஜ்ஜுக்கு போறேன், துவா செய்ங்க' என்று சொன்னதற்கு, அந்த பெண்மணி, 'தம்பி, உண்டியல்ல இந்த காச போட்டுடுங்க' என்று சொல்லியிருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

முதல் இரவு கலாட்டா

சொர்க்கமே என்றாலும் அது நாகூர போல வருமா? - எங்க ஊருக்குள்ள சாக்கடையும் இருக்கு சந்தனமும் இருக்கு. சாக்கடையில் ஒன்றாக மத சண்டைகளை சொல்லலாம். இது சாக்கடை பற்றிய பதிவல்ல என்பதால் சந்தனத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது அநாயசமாக ஒவ்வொருத்தர் வாயிலிருந்து வரும் நகைச்சுவையை சொல்லலாம். அதுவும் பெண்கள் பேசும் பேச்சுக்கள் இருக்கே. சொல்லவே வேண்டாம் ஏனென்றால் சிரிக்கவே நேரம் சரியா இருக்கும். வெளியூரிலிருந்து எங்க ஊரு பெண்ணை கல்யாணம் ஒருத்தர் கல்யாணம் பண்ணினார். ஊர் கார மாப்பிளையையே கலாய்க்கும் பெண்மணிகள் வெளியூரிலிருந்து வந்த அவரை சும்மா விடுவார்களா? இத்தனைக்கு அவர் பயந்த சுபாவம் வேற. கல்யாணம் எல்லாம் நல்லபடியாக முடிந்து அறைக்குள் கையழைத்து விட்ட பிறகு ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க பெண்மணி அவர்கள் மாப்பிளையை பார்த்து, 'இந்தாரும் தம்பி, கட்டில்ல ஒரு ஓரமா ஒக்காந்து இக்கணும், இந்த எடத்தை வுட்டு அசைய கூடாது, ஆமா' என்று சொல்லி விட்டார். கொஞ்சம் நேரம் கழித்து தட்டி திறந்த போது, மாப்பிள்ளை கட்டிலில் அந்த ஓரத்தில் உட்கார்ந்து கொண்டே, 'இந்த பாருங்க லாத்தா, நீங்க சொன்ன மாதிரி நவரவே இல்லை, வேணும