முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

முன்னுரை:
அய்யம்பேட்டை ஜியாவுதீன் ஹஜ்ரத அவங்களோட பயான் நாகூரில் நடக்காத நாளே இல்லாத நெலமை நாகூர்ல இருந்த காலம் உண்டு. இவர்களின் பயானை கேக்க போய் எல்லோரும் ரிலிஜியஸ் ஆகிவிட்டதால் சினிமா கொட்டகையையே மூடிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எங்களுடைய பாட்டனார் செல்லாப்பா என்று நாங்கள் அழைத்த மர்ஹும் தா.மு. சாதிக் மரைக்காயர் அவர்களே கூட அவர்களுடைய சொந்த செலவில் இவர்களின் ஹதீதை எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் ஹதீது நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பெரும் படை நாகூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே சாப்பாடு கடை நடத்தி  வந்த ஹாஜா அவர்களின் கடையில் போய் அமர்ந்து விடுவார்கள்.

இந்த ஹாஜா அவர்கள் சினிமா எடுக்க பிராயசைப்பட்டு பெரும் பணம் எல்லாம் செலவழித்தார்கள். இவர்களின் படத்திற்காக நாகூர் கவிஞர் சலீம் நானா அவர்கள் அருமையான பாடல்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். 

அந்த படையில் எனது தகப்பனார், இஜட். ஜபருல்லாஹ் நானா, நாகூர் கவிஞர் சலீம் நானா அவர்கள் இன்னும் ஏராளமான எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் கூடுவார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் தான் இந்த முராத் பேக் அவர்கள். மிக திறமையான பேச்சாளர். நான் இவர்களோடு ஒரே ஒரு முறை கிட்டதட்ட 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நானும் இவர்களும் மட்டும் தான். ஒரு விநாடியாவது நான் சிரிக்காமலில்லை.

 இந்த இண்டலெக்டுவல் படை விடிய விடிய பேசி சிரித்து மகிழ்ந்து ஹாஜா அவர்களின் ஸ்பான்சரில் நல்லா பசியாறிவிட்டு விடிகாலையில் கலைந்து செல்வார்கள்.

இனி நகைச்சுவைக்கு வருவோம்:
ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் அய்யம்பேட்டையில் வீடு கட்டி குடி புகுந்தார்கள். அப்போது படைகளுக்கு அழைப்பு. எல்லோரும் புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.

ஜியாவுதீன் ஹஜ்ரத்  அவர்கள் அனைவருக்கும் வீட்டை சுற்றி காட்டியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு இடமாக இது படுக்கையறை, சமையல் கட்டு, முற்றம் என்று காட்டிட்டு வரும் போது,

முராது பேக் அவர்கள், “இது தலைமாட்டுத் தெரு,  இது கால்மாட்டுத் தெரு, இது மியா தெரு, இது கலிபா சாபு தெரு” என்று கிண்டலடித்தார்களாம்.

அதாவது ஒவ்வொரு இடத்திலும் பயான் சொல்லி கிடைத்த வருமானத்தில் கட்டியதாம்.

Comments

Popular posts from this blog

முதல் இரவு கலாட்டா

பள்ளிகூடத்தில்..

மைத்தாங்கொல்லை