முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...
முன்னுரை: அய்யம்பேட்டை ஜியாவுதீன் ஹஜ்ரத அவங்களோட பயான் நாகூரில் நடக்காத நாளே இல்லாத நெலமை நாகூர்ல இருந்த காலம் உண்டு. இவர்களின் பயானை கேக்க போய் எல்லோரும் ரிலிஜியஸ் ஆகிவிட்டதால் சினிமா கொட்டகையையே மூடிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எங்களுடைய பாட்டனார் செல்லாப்பா என்று நாங்கள் அழைத்த மர்ஹும் தா.மு. சாதிக் மரைக்காயர் அவர்களே கூட அவர்களுடைய சொந்த செலவில் இவர்களின் ஹதீதை எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் ஹதீது நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பெரும் படை நாகூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே சாப்பாடு கடை நடத்தி வந்த ஹாஜா அவர்களின் கடையில் போய் அமர்ந்து விடுவார்கள். இந்த ஹாஜா அவர்கள் சினிமா எடுக்க பிராயசைப்பட்டு பெரும் பணம் எல்லாம் செலவழித்தார்கள். இவர்களின் படத்திற்காக நாகூர் கவிஞர் சலீம் நானா அவர்கள் அருமையான பாடல்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். அந்த படையில் எனது தகப்பனார், இஜட். ஜபருல்லாஹ் நானா, நாகூர் கவிஞர் சலீம் நானா அவர்கள் இன்னும் ஏராளமான எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் கூடுவார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் தான் இந்த முராத் பேக்