Posts

Showing posts from August, 2009

டி.ஆர்.. தோத்தார்..

கம்பன் எக்ஸ்பிரஸில் எக்மோரில் எறங்குனதோட குபுகுபுன்னு ஆட்டோ ஓட்டுறவங்க எல்லாம் தர்ஹால சோத்து சீட்டு வாங்குற மாதிரி கூடிட்டாங்க.. அதுலேந்து ஒருத்தர தேர்ந்தெடுத்து அவர் பின்னாடியே போன ஒடனே ஆட்டோ காரர் கேட்டார், "எங்க சார்..?" என்று நம்ம ஊர் ஆளு இப்படி கேட்டிருக்காஹா, "ஆட்டோ.. இங்கேந்து டிரிப்ளிகேனுக்கு போறதுக்கு என்ன ரேட்டோ?" (விஜய) டி.ஆர். தோத்தார்

சஹனுக்கு டிக்கெட்

ஒரு தடவை நாகூராளு ஒருத்தரு நாகப்பட்டினத்துல கல்யாணம் பண்ணுனார். எங்க ஊர்லேந்து ஒரு 8 பேர் போல பஸ்ஸுல கிளம்பி போனாஹல்வோ. கைலியும் தொப்பியுமா பஸ்ஸுல ஏறுனதோடவே கண்டக்டர் கேட்டுட்டார், "என்ன கல்யாணமா? சாப்பாடா? பிரியாணியா?, சரி, சரி, எத்தனை பேரு"ன்னு.. அதுக்கு நம்ம பேச்சுவாயன், "ரெண்டு சஹனுக்கு டிக்கெட் கொடுங்க" என்று கேட்டார். சஹன்னா என்னான்னு தெரியும் தானே, நாலு பேர் ஒண்ணா ஒக்காந்து சாப்புடுற பெரிய மரவ (தட்டு).