தொழுவாளி..
எங்க ஊர்ல சின்ன வாண்டுகள்லேந்து பெரிய ஜியாண்டுகள் வரைக்கும் வாய் பேச்சு கிழியும் என்பது ஊரறிந்த உலகறிந்த செய்தி. ஆனா எனக்கு தெரிந்த ஒருத்தர் ரொம்பவும் வித்தியாசமானவர், அவர் ரொம்ப அதிகப்படியா பேசுன வாத்தையே அஸ்ஸலாமு அலைக்கும் தான். அதுக்கு மேல யார்கிட்டேயும் அவர் பேசுனதே இல்லை. அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பார். தாடைல தாடி, தலைல தொப்பி, எப்போதும் வெள்ளை அரபி டிரஸ். ஒரு வக்துக்கு விடாம தொழுவ போறது. காட்டுபள்ளிக்கு அவர் ஊரில் இருந்த காலத்துல ஒரு சுபுஹ கூட தவற விட்டது கிடையாது. அப்படியாபட்டவருக்கு காட்டுபள்ளியில அஸர் தொழுகைக்கு பிறகு நிகாஹ் நடந்தது. ரொம்ப ரொம்ப சிம்பிளான நபி வழி திருமணம். விஷயம் இது தான் அஸருக்கு பிறகு திருமணம் முடிந்து வீட்டுக்கு போனவர், மக்ரிப் பாங்கு சொல்றதுக்கு முன்னாடி எப்போதும் போல காட்டுபள்ளிக்கு தொழுவ கிளம்பிட்டார். இதை பார்த்த எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா போயிடுச்சு, என்னடா இது அவனவன் கல்யாணம் முடிச்சுட்டு நாப்பது நாளைக்கு ரூம விட்டு வெளிய வரமாட்டான், பொண்டாட்டியோட ரூம்லய சில்லா இருப்பான், அஸருக்கு இந்த பக்கமா வீட்டுக்கு போனார், மக்ரிபுக்கு அந்த பக்கம