யாருக்கு கடன் யார் கொடுக்கணும்?

இஹலுக்கு ஒரு ஆயிர ரூவா பணம் தேவைப்பட்டுச்சு. ஒடனே கூட்டாளியை சந்திச்சு ஆயிர ரூவா கடன் கேட்டிருக்காஹா. அஹலும் (இனி இவர் கூட்டாளி 1 என்று அழைக்கப்படுவார்) ‘இஹ காசு கேட்டுட்டாஹலே.. கொடுக்காம இருக்க கூடாதே’ன்னு ஒடனே எடுத்து கை(யி)ல கொடுத்து இக்கிறாஹா.

காசை வாங்கிட்டு கூட்டாளி 1 டம் “அடுத்த மாசம் ஒண்ணாம் தேதிலாம் டான் பணத்த திருப்பி கொடுத்துடுவேனங்கனி’ன்னு சொல்லிருக்காஹா..

கூட்டாளி 1ம் ‘ரொம்ப சந்தோஷங்க..’ன்னு சந்தேகத்தோட சொன்னார்.

ஒண்ணாந் தேதி வந்தது..
சொன்ன மாதிரி கூட்டாளி 1க்கு வாங்குன பணத்த கொடுத்தாவணுமே...

இன்னொரு கூட்டாளியை சந்திக்கிறாஹா...  (இனி இவர் கூட்டாளி 2 என்று அழைக்கப்படுவார்)
அதே மாதிரி ஆயிரம் ரூவா காச கேட்டாஹா...
அவரும் கொடுத்து இக்கிறார்.
அதே மாதிரி “அடுத்த மாசம் ஒண்ணாம் தேதிலாம் டான் பணத்த திருப்பி கொடுத்துடுவேனங்கனி’ன்னு இவர்கிட்டேயும் சொல்லிருக்காஹா..

கூட்டாளி 2ம் ‘ரொம்ப சந்தோஷங்க..’ன்னு இவரும் சந்தேகத்தோட தான் சொன்னார்.

கூட்டாளி 2 டம் வாங்கிய ஆயிரம் ரூவாவ வாங்கிட்டு வந்து கூட்டாளி 1டம், ‘பாத்தியமாங்கனி சொன்ன மாறி கொடுத்துட்டேன்..’ன்னு சொல்லி ஆயிரம் ரூவா காச அப்படியே திருப்பி கொடுத்திருக்காஹா...
கூட்டாளி 1 ஹல்பெல்லாம் குளுந்து இக்கிறாஹா..

அடுத்த ஒண்ணாம் தேதி வந்தது...
சொன்ன மாதிரி கூட்டாளி 2க்கு வாங்குன பணத்த கொடுத்தாவணுமே...

இப்போ திரும்ப கூட்டாளி 1க்கே வந்திருக்காஹா..
மறுபடி அதே பல்லவி
அதே சரணம்
பணத்த வாங்கிட்டு கூட்டாளி 2ட்ட கொடுத்திருக்காஹா..

இப்படியே கூட்டாளி 1கிட்டே வாங்கி கூட்டாளி 2கிட்டேயும் கூட்டாளி 2 கிட்டே வாங்கி கூட்டாளி 1 கிட்டேயும் திரும்ப திரும்ப கொடுத்துகிட்டே இருந்திருக்காஹா.. இது கிட்டதட்ட ஒரு வருஷத்துக்கு மேலே ஓடிகிட்டே இருந்திருக்கு..

ஒரு நாளு கூட்டாளி 1ஐயும் கூட்டாளி 2ஐயும் குறிப்பிட்ட டயத்த சொல்லி ”தர்ஹா அலங்கார வாசலுக்கு வந்துட்டுங்க”ன்னு செய்தி அனுப்புனாஹா...

அஹல்வொலும் (கூட்டாளி 1 & 2) ’இஹ வர சொல்லிட்டாஹலே, என்னமோ ஏதோ’ன்னு நெனைச்சுகிட்டு சொன்ன டயத்துக்கு கரெக்டா அலங்கார வாசலுக்கு வந்து நிக்கிறாஹல்வோ..

இஹ வந்தாஹா..
ரெண்டு பேர்ட்டயும் ஸலாம் சொல்லி ரெண்டு பேர்ட்டயும் காசு வாங்குனது.. மாத்தி மாத்தி ஒரு வருஷத்துக்கும் மேலா கொடுத்துட்டு வந்தது உள்பட எல்லா சேதியும் எடுத்து விபரமா சொல்லிட்டு..
”... இந்த பாருங்க.. நான் ஒரு ரெண்டு மாசத்துக்கு வெளியூர் போறேன்.. என்னால உங்கள்வொல்ட்ட வாங்கி மாத்தி மாத்தி கொடுக்க முடியாது.. அதனால நீங்க ரெண்டு பேரும் கரெக்டா ஒண்ணாம் தேதியானத்தோட இதே அலங்கார வாசல்ல வந்து காச சரியா எண்ணி கொடுத்துக்குங்கள்வோ..” என்று சொல்லியிருக்காஹா..

கடைசியா அஹல பார்த்த ஆளுவோ.. மேற்படி கூட்டாளி 1 & 2 பேரும் திருதிருன்னு முழிச்சிகிட்டு அங்கேயே ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருந்ததா சொன்னாஹா..

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

கொடுத்த காசு வீண் போகலை