Posts

Showing posts from 2017

கொடுத்த காசு வீண் போகலை

புதுசா படம் ரிலீசானா இந்த நாகூர் ஜமாக்கு (கூட்டத்துக்கு)  ஹல்பெல்லாம் (மனசெல்லாம்) குளுந்த மண்டபமா (குளிர்ந்த மண்டம் - நாகூர் தர்காவில் உள்ள ஒரு இடம் - கோடையில் கூட குளிராய் இருக்கும்) மாறிடும்.  ரிலீசான படங்களை பார்க்குறதுக்காக காரை புடிச்சிகிட்டு மாயவரம் என்னா?, திருவாரூர் என்னா?, தஞ்சாவூர், திருச்சி, ஏன் சென்னைக்கு கூட போய் தங்கி படம் பார்த்துட்டு வருவதுண்டு. ஒரு சமூக நீதியோட தான் படம் பார்ப்போம், பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்று கிடையாது, அது அட்ரஸே இல்லாத படமாக இருந்தாலும் சரி, ஒரு முறையேனும் பார்த்துவிடுவது என்று கோடம்பாக்கத்துக்கும் நாகூருக்கும் ஒரு psychological contract கூட இருக்கிறது.  அப்படி ஒரு முறை 'மங்கள நாயகன்' என்ற ஒரு படத்தை சென்னை லிட்டில் ஆனந்த் எனும் திரையரங்கத்தில் நான் உறவினர்கள் சகிதமாக பார்த்து கொண்டிருந்தேன். படம் பெரும் குப்பை என்பதை தவிர படத்தை பற்றிய செய்திகள் வேறு எதுவும் நினைவிலில்லை. பால்கனியில் எங்க ஜமா அல்லாமல் ஒரு இரண்டு நண்பர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து கிட்டதட்ட இடைவேளை விடப் போற நேரம், அந்த இரண