Posts

கொடுத்த காசு வீண் போகலை

புதுசா படம் ரிலீசானா இந்த நாகூர் ஜமாக்கு (கூட்டத்துக்கு)  ஹல்பெல்லாம் (மனசெல்லாம்) குளுந்த மண்டபமா (குளிர்ந்த மண்டம் - நாகூர் தர்காவில் உள்ள ஒரு இடம் - கோடையில் கூட குளிராய் இருக்கும்) மாறிடும்.  ரிலீசான படங்களை பார்க்குறதுக்காக காரை புடிச்சிகிட்டு மாயவரம் என்னா?, திருவாரூர் என்னா?, தஞ்சாவூர், திருச்சி, ஏன் சென்னைக்கு கூட போய் தங்கி படம் பார்த்துட்டு வருவதுண்டு. ஒரு சமூக நீதியோட தான் படம் பார்ப்போம், பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்று கிடையாது, அது அட்ரஸே இல்லாத படமாக இருந்தாலும் சரி, ஒரு முறையேனும் பார்த்துவிடுவது என்று கோடம்பாக்கத்துக்கும் நாகூருக்கும் ஒரு psychological contract கூட இருக்கிறது.  அப்படி ஒரு முறை 'மங்கள நாயகன்' என்ற ஒரு படத்தை சென்னை லிட்டில் ஆனந்த் எனும் திரையரங்கத்தில் நான் உறவினர்கள் சகிதமாக பார்த்து கொண்டிருந்தேன். படம் பெரும் குப்பை என்பதை தவிர படத்தை பற்றிய செய்திகள் வேறு எதுவும் நினைவிலில்லை. பால்கனியில் எங்க ஜமா அல்லாமல் ஒரு இரண்டு நண்பர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து கிட்டதட்ட இடைவேளை விடப் போற நேரம், அந்த இரண

சேக்க தெரியுமா?

இவர் ரொம்ப செலவாளி... வெளிநாட்டுக்கு போயிட்டு வந்து நல்லா சம்பாதித்தார்... ஒரு சொத்து இல்லாகட்டி கூட பரவாயில்லை... கடன் இல்லாமல் இருக்கணும் இல்லையா? ஆனால் கழுத்து வரை கடன்... இவரின் கூட்டாளி, “ஏங்கனி, கடனில்லாம வாழணும்னா, சம்பாதிக்கிறதா பூரா செலவழிச்சுட கூடாது... கொஞ்சமாவது சேத்து வைக்கணும்... அது சரி... உம்பர்க்கு சேக்க தெரியுமா?” கடுப்புல இருந்த இவர், “எனக்கு சேக்க தெரியுமே... தர்ஹால   பெரிய எஜமான் வாசல்ல பாதம்  வைப்பாரே அவர் தானே...” என்றார்.

இல்லை என்று சொல்லுவதில்லை

நாகூர் ஹனிபா மாமா அவர்களின் பாட்டிற்கு முபாரக்கான கமெண்ட்: கவிஞர் முபாரக்கின் பழைய தமாஷ் : 'இறைவனிடம் கையேந்துங்கள் - அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' இருக்கிறதென்றும் சொல்லுவதில்லை நன்றி : உளறல் டாட் காம் (நல்ல பெயர்!) - ஆபிதீன் நானா அவர்களின் G+ லிருந்து அவர்களிடம் சொல்லிவிட்டு எடுத்தது.

நல்லவரா? கெட்டவரா?

"கீர.. கீர.." தலை தெறிக்கிற வெயில்ல தொண்டை தண்ணி வத்த கத்தி கத்தி பொழப்பை நடத்த நடையை கட்டி கொண்டிருந்தார் அந்த பெண்மணி. ஒரு வீட்டு வாசலில் நின்று "ஏம்மா.. கீரை வேணுமாம்மா.. " என்று பல முறை கேட்டு கத்தியிருக்கிறார். வாசல் கதவு திறந்திருந்தது... உள்ளேயிருந்து 'வேணும்' 'வேணாம்னு' ஒரு பதிலும் இல்லை.. சிறிது நேரம் நின்று பார்த்தார்.. 'இது சரிப்பட்டு வராது' என்று நடையை கட்ட ஆரம்பித்து விட்டார்.. தெரு முனைக்கு வந்து விட்டார்.. அவர் நின்று கேட்ட அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த அந்த துப்பட்டி 'இந்தாம்மா.. கீரை காரம்மா..' என்று கத்தி கூப்பிடவே.. தெரு முனை திரும்பிய அவர் திரும்பி ஓட்ட நடையுடன் கீரை கூடையை சுமந்த படி வந்து வீட்டு வாசலில் கூடையை இறக்க, அந்த வீட்டு பெண்மணி, 'செத்த மிந்தி வந்தப்போ குளிச்சிட்டு இந்தேன்.. கேட்டது காதுல வுழுந்துச்சு.. ஒடனே ஓடி வந்து சொல்ல முடியல.. மன்னிச்சுக்கம்மா..  கீர இப்போ வாணா(வேண்டாம்)ன்னு  சொல்ல தான் கூப்ட்டேன்..' - அந்த பெண்மணி நல்லவரா? கெட்டவரா?

கதவு

வாசல் கதவு உள் பக்கமாக தாழிட்டு இருந்தது. வீட்டின் வாசலில் உள்ள அழைப்பு மணியை அழுத்தி விரலில் உள்ள 'வி'யும் 'ர'வும் போயே போய் விட்டது. கதவை ரொம்ப நேரமாக தட்டியும் திறந்த பாடில்லை.  எங்க மாமா மிகவும் கோபக்காரர். எங்க மாமாவிற்கு பிடிக்காத பழமொழி அல்லது சொல்மொழி 'தோலுக்கு மேலே வளர்ந்துட்டா பெத்த புள்ளைங்க கூட தோழர்கள் அல்லது தோழிகள்' என்பதாகும். பிடித்த பழமொழி 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி மாமன் மச்சான் கூட உதவ மாட்டான்' என்பதாகும். அதனால் பிள்ளைங்க எல்லாம் பயந்து நடுங்குங்க.. இப்போது அவர் தான் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்.  கேள்வி: யார் வீட்டு கதவை?  -  பதில்: அவர் வீட்டு கதவை தான். என் மாமாவின் மகனார் இருக்கிறாரே, அவர் பத்தாவது பரீட்சை எழுதியிருந்தார். அவர் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரவேண்டும் என்று கண்டிப்பாக கறாராக கட்டளையிட்டிருந்தார்கள் எங்கள் மாமா.  அன்னாருடைய மகனோ, 'வாப்பா ஸ்டேட் ஃபர்ஸ்ட் ரொம்ப கஷ்டம் வாப்பா.. இருந்தாலும் நான் முயற்சி பண்றேன்.. எப்படியும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாவது வாங்கி காட்டுறேன்' என்று சவால் விட்டிருந்தார்.  அவர் இதுவரை விட்ட எந்த சவ

JB பாஷா பாய்

எங்க ஊர்ல உள்ள ஒரு நபரை பத்தி எழுதலாம் என்று நினைக்கிறேன். அவரை பத்தி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஆளவந்தான் கமல் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்றால் இவர் எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று சொல்லலாம். வஹ்ஹாபிகள் தலையெடுத்த புதிதில் இவரிடம் தர்ஹாக்கு நீங்க ஜியாரத்துக்கு போவீங்களா? என்ற கேள்வியை கேட்ட போது “தர்ஹாக்கு நான் போ மாட்டேன்.. அதாவது ’பத்தி’யோட (ஊதுவர்த்தி) போ மாட்டேன் ’பக்தி’யோட போவேன்” என்று வஹ்ஹாபிகளையே குழப்பினவர் அவர். அதெல்லாம் சரி, அவர் எப்படி எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று நீங்கள் கேட்கலாம்..?  அதற்கான விடை இதோ: நான் சொல்ல வரும் இந்த நபரின் வாப்பா பெயர் ஜானி - நாகூரார்க்ளுக்கு ஞாபகம் இருக்கலாம், ஒரு காலத்தில் இவர்கள் தான் நாகூரில் நடக்கும் பெரும்பாலான எல்லா நிகாஹுக்கும் ரோக்கா கொடுப்பார்கள் இப்பொழுது மர்ஹும் - நான் சொல்ல வரும் நபர் பெயர் பாஷா, அதை அப்படியே சுருக்கி ஜே.பி. அதாவது ஜானி பாஷா. இது எப்படி எம்.ஜி.ஆர். மாதிரி ஆகும் என்றால், ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் ஜே.பி. அதனால இவர் எம்.ஜி.ஆரில் பாதி...  அடு

நாங்கள் வைத்த பெயர்

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சினிமா இயக்க பைத்தியம் பிடித்து அலைந்த மாதிரி நாங்களும் சிறு வயதில் சினிமா இயக்க வேண்டும் என்று பைத்தியம் பிடித்து அலைந்ததுண்டு. (இல்லேண்டாலும் அப்படித் தான்) காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர் படத்துக்கு ‘கத்தி முனையில் ரத்தம்’ என்று பெயர் வைத்திருப்பார்.  நாங்கள் அதே தலைப்போடு நாகூரோடு ஒத்து போகிற இன்னொரு பெயரையும் இணைத்து பெயர் வைத்து வீட்டில் பைத் வாங்கினோம் நாங்கள் வைத்த பெயர்.. ‘கத்தி முனையில் ரத்தம் மைத்தாங் கொல்லையில் ஹத்தம்“ - இதுக்கு யார் தான் ஏசாம இருப்பார்கள்..?

பவலைக்கு எத்தனை மணி

மதியானம் படத்துக்கு போக வேண்டும் என்று திட்டம். எத்தனை மணிக்கு எங்கே சந்திப்பது என்பது பற்றிய பேச்சு சுவாரசியமாக நடந்து கொண்டிருந்தது. எங்கே சந்திப்பது என்பது முடிவாகிவிட்ட நிலையில் இப்போது எத்தனை மணிக்கு என்பது பற்றிய பேச்சு.. ஒருவர், 'பவலைக்கு எத்தனை மணி..' என்று ஆர்வமாக கேட்க  (பவல் - பகல்)  (பகல் எத்தனை மணிக்கு சந்திக்கலாம்? என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்வி) மற்றொரு நண்பர், '12 மணியாயிட்டா பவல் தாங்கனி..' என்றார்

மைத்தாங்கொல்லை

எங்க ஊட்ல 'பாத்திமாபீ லாத்தா' தான் சோறாக்கி கறியாக்கி வச்சு கொடுத்துட்டு போவாஹா. அஹலுக்கு சேத்த மரைக்கான், முத்து மரைக்கான் என்று இரண்டு மகன்கள். ஒரு நாள் அவர்களால் வீட்டுக்கு வர முடியலை. வராததற்கான காரணத்தை அதாவது அவர்கள் 'பைத்தாங்கொல்லை'  (என்று தான் நினனக்கிறேன், அந்த ஊரின் பேர் எனக்கு மறந்து விட்டது) என்ற ஊருக்கு போக வேண்டியிருந்ததால் தான் வர இயலவில்லை - இந்த மேற்கூறிய காரணத்தை அவர்களின் மகன் முத்து மரைக்கான் மூலமாக எங்க வீட்டுக்கு முறையாக தகவல் சொல்லி அனுப்பினார்கள். முத்து மரைக்கான் வந்து எங்க பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம் தகவல் சொன்னான். 'ம்மா இன்னைக்கு வர மாட்டாஹலாம்.. 'மைத்தாங்கொல்லை'க்கு   போறாஹலாம்.. நாலைக்கு வர்ரேண்டு சொல்ல சொன்னாஹா..' என்று வீட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டோம். எங்க பாட்டியா சிரித்து கொண்டே சொன்னாஹா, 'மைத்தாங்கொல்லைக்கு போனஹ யாருமே திரும்ப வர முடியாதேப்பா..' என்று அவன் அலட்டிக்காம, 'தெரியலைங்க.. எங்க ம்மா எப்படியும் வந்துடறேன்னு சொல்ல சொன்னாஹா..' என்றான்

நாற்காலி

நான் செட்டியர் ஸ்கூல்ல ரெண்டாவது படிச்சிகிட்டிருந்தேன். வாத்தியார் பேர் தெரியலை. ஆனாக்கா 'செவுட்டு வாத்தியார்' என்று தான் கூப்பிடுவோம். அவருக்கு காது அவ்வளவா கேட்காது அல்ல அவ்வளவும் கேட்காது. வாத்தியார்களுக்கு பல பேர் இப்படி மாணவர்கள் வைப்பதுண்டு. ஒரு வாத்தியாருக்கு 'போண்டா சார்' என்று கூட பெயரிருந்தது. அவர் போண்டா பிரியமா சாப்பிடுவாரா? அல்லது போண்டா மாதிரி இருப்பாரா? அல்லது இரண்டுமேவா? என்றெல்லாம் ஞாபகமில்லை. இத எழுதிக்கிட்டு இருக்கும் போது மஞ்சக்கொல்லைல கிட்டதட்ட எல்லா வீடுகளுக்கும் ஆளுங்களுக்குமே கூட இப்படி ஒரு பட்டப் பேரிருக்கும். அப்படி அந்த ஊரு ஒருத்தருக்கு வாரி(றி) வழங்கிய பேரு 'அறிவாளி'.  அந்த 'அறிவாளி' ஒரு முறை வெளியூரில்  (நாகூர்ன்னு வச்சுக்குங்களேன்) வசிக்கும் ஒருத்தருக்கு ஒரு வேலை விஷயமா போன் பேசியிருக்கிறார். போனை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். போனை எடுத்த அந்த நபரும் இவர் பேச நினைத்த நபரும் சிவசேனாவும் ஷாருக்கானும் மாதிரின்னு வச்சுக்குங்க, அவருகிட்டே தான் இவர் பேசியிருக்கிறார். 'இன்னவர் இருக்கிறாரான்னு?' நம்ம அறிவாளி கேட்டிருக்கிற

பிரியாணி சோத்துக்கு நன்றி

இஜட்.ஜபருல்லாஹ் மாமா ஒரு விருந்தில் கலந்து கொண்டாஹா... பிரியாணி.. பெரிய பெரிய துண்டு இறைச்சி  தாழிச்சா பொறிச்ச கோழி குருமா பால்தா.. வயிற தாண்டி  வாய் வரை நிறைஞ்சிருந்த சஹன் விருந்து சாப்பாடு முடிந்ததும்... பாத்திஹா ஓதி அல்லாஹ்க்கு நன்றி சொல்லியிருக்காஹல்வோ... நாலு பேர்ல ஒருத்தவங்க மட்டும் பாத்திஹா ஓதும் போதே வெளிநடப்பு செஞ்சிருக்காஹா.. அது வேற யாருமல்ல.. நம்ம இஜட் மாமா தான். மத்த எல்லாருக்கும் சரி கோவம்.. வந்து கேட்டிருக்காஹல்வோ.. “ஏங்க இப்படி எந்திரிச்சு போயிட்டீங்க... பெரிய பாவம் தானே..” ன்னு. அதுக்கு இஜட் மாமா சொல்லிருக்காஹா, ’காலைல வெறும் தேத்தணி குடிச்சேன்.. அப்போ நன்றி சொல்லலை.. நாலு இட்லியும் பொதினா சட்னியும் சாப்டேன்... அப்போவும் நன்றி சொல்லலை.. மதியானம் மொலவுதண்ணி சோறு தான் சாப்டேன்.. அப்போவும் நன்றி சொல்லலை.. இப்போ பிரியாணி சோத்துக்கு மட்டும் நன்றி சொன்னாக்கா அல்லாஹ் கோச்சுக்குவான்... அது தான் பெரிய பாவம்’ ன்னு ஒரு போடு போட்டாஹலே பார்க்கலாம்..

யாருக்கு கடன் யார் கொடுக்கணும்?

இஹலுக்கு ஒரு ஆயிர ரூவா பணம் தேவைப்பட்டுச்சு. ஒடனே கூட்டாளியை சந்திச்சு ஆயிர ரூவா கடன் கேட்டிருக்காஹா. அஹலும் (இனி இவர் கூட்டாளி 1 என்று அழைக்கப்படுவார்) ‘இஹ காசு கேட்டுட்டாஹலே.. கொடுக்காம இருக்க கூடாதே’ன்னு ஒடனே எடுத்து கை(யி)ல கொடுத்து இக்கிறாஹா. காசை வாங்கிட்டு கூட்டாளி 1 டம் “அடுத்த மாசம் ஒண்ணாம் தேதிலாம் டான் பணத்த திருப்பி கொடுத்துடுவேனங்கனி’ன்னு சொல்லிருக்காஹா.. கூட்டாளி 1ம் ‘ரொம்ப சந்தோஷங்க..’ன்னு சந்தேகத்தோட சொன்னார். ஒண்ணாந் தேதி வந்தது.. சொன்ன மாதிரி கூட்டாளி 1க்கு வாங்குன பணத்த கொடுத்தாவணுமே... இன்னொரு கூட்டாளியை சந்திக்கிறாஹா...  (இனி இவர் கூட்டாளி 2 என்று அழைக்கப்படுவார்) அதே மாதிரி ஆயிரம் ரூவா காச கேட்டாஹா... அவரும் கொடுத்து இக்கிறார். அதே மாதிரி “அடுத்த மாசம் ஒண்ணாம் தேதிலாம் டான் பணத்த திருப்பி கொடுத்துடுவேனங்கனி’ன்னு இவர்கிட்டேயும் சொல்லிருக்காஹா.. கூட்டாளி 2ம் ‘ரொம்ப சந்தோஷங்க..’ன்னு இவரும் சந்தேகத்தோட தான் சொன்னார். கூட்டாளி 2 டம் வாங்கிய ஆயிரம் ரூவாவ வாங்கிட்டு வந்து கூட்டாளி 1டம், ‘பாத்தியமாங்கனி சொன்ன மாறி கொடுத்துட்டேன்..’ன்னு சொல்லி ஆயிரம் ரூவா

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

முன்னுரை: அய்யம்பேட்டை ஜியாவுதீன் ஹஜ்ரத அவங்களோட பயான் நாகூரில் நடக்காத நாளே இல்லாத நெலமை நாகூர்ல இருந்த காலம் உண்டு. இவர்களின் பயானை கேக்க போய் எல்லோரும் ரிலிஜியஸ் ஆகிவிட்டதால் சினிமா கொட்டகையையே மூடிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எங்களுடைய பாட்டனார் செல்லாப்பா என்று நாங்கள் அழைத்த மர்ஹும் தா.மு. சாதிக் மரைக்காயர் அவர்களே கூட அவர்களுடைய சொந்த செலவில் இவர்களின் ஹதீதை எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் ஹதீது நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பெரும் படை நாகூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே சாப்பாடு கடை நடத்தி  வந்த ஹாஜா அவர்களின் கடையில் போய் அமர்ந்து விடுவார்கள். இந்த ஹாஜா அவர்கள் சினிமா எடுக்க பிராயசைப்பட்டு பெரும் பணம் எல்லாம் செலவழித்தார்கள். இவர்களின் படத்திற்காக நாகூர் கவிஞர் சலீம் நானா அவர்கள் அருமையான பாடல்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள்.  அந்த படையில் எனது தகப்பனார், இஜட். ஜபருல்லாஹ் நானா, நாகூர் கவிஞர் சலீம் நானா அவர்கள் இன்னும் ஏராளமான எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் கூடுவார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் தான் இந்த முராத் பேக்

Width (வித்) எவ்வளவு?

கணக்கு வாத்தியார் ஒருவர் நாகூர் வாசியிடம், ஒரு கட்டடத்தை வரைபடமாக வரைந்து, ‘இது எவ்வளவு வித் சொல்லு?” என்றார் அதுக்கு நம்ம ஊரு பையன் சொல்லியிருக்கான், “சார், இதுக்காகலாம் எதையும் வித்துலாம் சொல்ல முடியாது”ன்னு - ”எங்கே போய் முட்டிக்கிறது”ங்கறார் வாத்தியார் (வித்து - விற்று, விற்பனை செய்து)