முதல் இரவு கலாட்டா

சொர்க்கமே என்றாலும் அது நாகூர போல வருமா? - எங்க ஊருக்குள்ள சாக்கடையும் இருக்கு சந்தனமும் இருக்கு. சாக்கடையில் ஒன்றாக மத சண்டைகளை சொல்லலாம். இது சாக்கடை பற்றிய பதிவல்ல என்பதால் சந்தனத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது அநாயசமாக ஒவ்வொருத்தர் வாயிலிருந்து வரும் நகைச்சுவையை சொல்லலாம். அதுவும் பெண்கள் பேசும் பேச்சுக்கள் இருக்கே. சொல்லவே வேண்டாம் ஏனென்றால் சிரிக்கவே நேரம் சரியா இருக்கும்.

வெளியூரிலிருந்து எங்க ஊரு பெண்ணை கல்யாணம் ஒருத்தர் கல்யாணம் பண்ணினார். ஊர் கார மாப்பிளையையே கலாய்க்கும் பெண்மணிகள் வெளியூரிலிருந்து வந்த அவரை சும்மா விடுவார்களா? இத்தனைக்கு அவர் பயந்த சுபாவம் வேற.

கல்யாணம் எல்லாம் நல்லபடியாக முடிந்து அறைக்குள் கையழைத்து விட்ட பிறகு ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க பெண்மணி அவர்கள் மாப்பிளையை பார்த்து, 'இந்தாரும் தம்பி, கட்டில்ல ஒரு ஓரமா ஒக்காந்து இக்கணும், இந்த எடத்தை வுட்டு அசைய கூடாது, ஆமா' என்று சொல்லி விட்டார்.

கொஞ்சம் நேரம் கழித்து தட்டி திறந்த போது, மாப்பிள்ளை கட்டிலில் அந்த ஓரத்தில் உட்கார்ந்து கொண்டே, 'இந்த பாருங்க லாத்தா, நீங்க சொன்ன மாதிரி நவரவே இல்லை, வேணும்னா எஹல்ட கேட்டு பார்த்துக்குங்க' என்று அவரது மனைவியை கேக்க சொல்லி இருக்கிறார்.

கல்யாண வீடே சிரித்து களேபரமானது

Comments

//சொர்க்கமே என்றாலும் அது எங்க நாகூர போல வருமா?//
எவ்வளவு விபரீதமான வார்த்தைகள் நண்பரே? ஒரு முஸ்லிம் எழுத்தாளர் தமது எழுத்துக்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
தங்கள் பதிவின் முகப்புப் பக்கத்தில்
//தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்றார்கள் நபிகள் நாயகம்,//
என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு நபி மொழியைக் குறிப்பிடுவதாக இருந்தால் அந்த நபி மொழி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? அதனை அறிவித்தவர் யார்? அந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை என்ன? என்பதை யெல்லாம் குறிப்பிடவேண்டும்.
'என்னைப் பற்றி யார் வேண்டுமென்றே பொய்யை இட்டுக்கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்' (அறிவிப்பவர்: அபூஹ+ரைரா ரலி ஆதாரம்: புகாரி) என்னும் நபிமொழியை நினைவிற் கொள்ள வேண்டும்.
nagoreismail said…
நல்லது நண்பர் மஸ்டூகா அவர்களே,

ஸலாமலைக்கும் (வரஹ்).. (மீ த ஃபர்ஸ்ட்)

நான் சொல்றேன்னு தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், நீங்கள் இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் ஒரு முஸ்லீம் எழுத்தாளராகிய நான் விபரீதமான வார்த்தைகளை எழுதி விட்டதாக உணர வில்லை. உங்களை அந்த சொர்க்கம் சம்மந்தபட்ட வார்த்தை பாதித்ததில் வருந்துகிறேன். எனக்கு என்னவோ சொர்க்கத்துக்கு அடிமையாக கூடாது என்று தான் தோன்றுகிறது.

இரண்டாவதாக, குறிப்பிட்டிருக்கும் இந்த நபிமொழி அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதிவு செய்யப்பட்ட புத்தகங்களில் இல்லை என்று உங்களுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும், நான் குறிப்பிட்டிருக்கும் இந்த ஹதீஸுக்கு இன்னார் மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்று நிச்சயம் வெளியிடுகிறேன்.

இட்டுகட்டுபவர்களுக்கு நரகம் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஹதீஸை நிச்சயம் நினைவிற் கொள்கிறேன். நன்றி
உங்கள் ஊரை உயர்த்திப்பேச உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் வார்த்தைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சுவர்க்கத்தின் சிறப்புக்கள் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் அநேக வசனங்களில் குறிப்பிடுகிறான்.அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களின் ஏராளமான அமுத மொழிகள் நமக்கு சுவர்க்கதின் சிறப்புக்கள் குறித்து உணர்த்துகின்றன. அவற்றையெல்லாம் விட நாகூர் எந்த வகையில் உயர்ந்தது எனத் தாங்கள் கூறுவீர்களா?
தங்களது வார்ததைப் பிரயோகம் அல்லாஹ்வையும் அவனது திருத்ததூதர் (ஸல்) அவர்களையும் அலட்சியப்படுத்துகிறது என்பதை தாங்கள் உணரவில்லையா?
அந்த வார்த்தை என்னைப் பாதித்ததற்காக தாங்கள் வருந்தியிருக்கிறீர்கள். ஒரு சக முஸ்லிம் சகோதரன் என்ற முறையில் எனக்காக வருந்துவதைவிட அந்த வார்த்தையின் பொருள் அதாவது 'சுவர்க்கத்தைவிட நாகூர் சிறந்தது' அல்லாஹ்வையும் அவனது திருத்ததூதர் (ஸல்) அவர்களையும் தாழ்வுபடுத்துகிறதே அதற்காக அல்லவா தாங்கள் வருந்த வேண்டும்.
அடுத்து //எனக்கு என்னவோ சொர்க்கத்துக்கு அடிமையாகக் கூடாது என்று தான் தோன்றுகிறது//
உங்களுக்குத் தோன்றுவதெல்லாம் இஸ்லாமாகிவிடாது.
அடுத்து தாங்கள் குறிப்பிட்டிருக்கும் நபி மொழி அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நூல்களில் இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கேட்டுள்ளீர்கள்.
கேட்கவே விநோதமாகத் தோன்றவில்லையா தங்களுக்கு? நபி மொழி என்று குறிப்பிடும் தாங்கள் தானே அதற்கான ஆதாரத்தைத் தரவேண்டும்.இவ்வளவு பெரிய எழுத்தாளராகிய தங்களுக்கு இது கூடத் தெரியவில்லை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த நபி மொழியை தங்களுக்கு சொன்னவர்களிடம் அல்லவா தாங்கள் இதற்கான ஆதாரத்தைக் கேட்க வேண்டும்.அல்லது தாங்கள் எந்த நூலிலிருந்து இதை எடுத்தீர்கள் என்பதை தாங்கள் தான் விளக்க வேண்டும்.
தன்னை அறிவது என்றால் என்ன? தன்னை அறிந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள், என்னைப் பற்றி நான் அறிந்ததை விட வேறு கூடுதலாக என்ன அறிந்து விட்டார்கள்?
என்னைப் பற்றி நான் அறிந்து வைத்திருக்கிறேன். எனது பெயர், எனது பெற்றோர், எனது குடும்பம், எனது முகவரி, எனது வயது? பிறந்த தேதி, எனது எடை உயரம் நிறம் ஆகிய இவை அனைத்தும் எனக்குத் தெரியும். இதைத்தான் அனைவரும் அறிவோமே. தன்னை அறிந்ததாக சொல்பவர்கள் இதைவிட வேறு கூடுதலாக வேறு என்ன அறிந்து வைத்துள்ளனர்? என்று கேட்டு சொல்கிறீர்களா? என்னைப் பற்றி இன்னும் கூடுதலாக அறிந்து கொள்ள எனக்கு உதவும் அல்லவா?
nagoreismail said…
ஸலாமலைக்கும் (மீண்டும்)

"அவரா நீங்கள்.." என்று தான் கேட்க தோன்றுகிறது.

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விளங்கி விட்டது (i know where you came from), சொர்க்கத்தை பற்றி அல்லாஹ் உயர்வாக சொல்லியிருக்கிறான், அதை விட நாகூர் எப்படி உயர்ந்தது என்பது உங்களது வாதம், அதையும் ஒரு முஸ்லீமான நான் எப்படி அல்லாஹ் உயர்த்தி பேசிய சொர்க்கத்தை விட தான் பிறந்த ஊரை உயர்த்தி பேசலாம் என்பதே உங்களது வாதம்.

படித்தவுடன் "அடடா என்ன அருமையான கேள்வி அல்லது மடக்குதல்" என்று தோன்றினாலும் எனக்கு என்னவோ அபத்தமாக தான் இருக்கிறது உங்களுடைய கேள்வி.

நான் வருந்தியது கூட உங்களது அறியாமையை நினைத்து தான். உங்கள் குறுகிய பார்வையை பற்றி தான்.

உங்களுக்காக வேண்டுமென்றால் இப்படி பதில் சொல்கிறேன், ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்று சொல்லுங்கள் நண்பரே - என்னைய வேற பெரிய எழுத்தாளர் என்று வேறு கூறி விட்டீர்கள் (உண்மையில் இது தான் விபரீதமான வார்த்தைகளாக எனக்கு தோன்றுகிறது)-

அதாவது நாகூரையும் அல்லாஹ் தான் படைச்சான், சொர்க்கத்தையும் அல்லாஹ் தான் படைச்சான், நான் வந்து அல்லாஹ் படைத்த ஒன்றை அவனே படைத்த இன்னொன்றை விட எனக்கு உசத்தி என்று தான் சொல்லியிருக்கிறேன், ஆனால் எனக்கு எதுவும் அல்லாஹ்வ விட உசத்தி கிடையாது. இதை நான் உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது அது போல் தான் நீங்களும்.

அடுத்து எனக்கு தோன்றுவதெல்லாம் இஸ்லாமாகி விட்டது என்று எழுதியிருந்தீர்கள் - உங்களுக்கு விஷயமே தெரியாது என்று நினைக்கிறேன், குரானும் ஹதீஸும் மட்டும் தான் என்று ஒத்த குரலில் வாதிட்டவர்கள் இருக்கும் அதே குரான் அதே ஹதீஸை வைத்துக் கொண்டு தன் பால் புரிந்து கொண்ட விளக்கங்களை வைத்து கொண்டு அறிஞர்கள் ஆலிம்கள் என்று அறியப்பட்டவர்கள் அல்லது நம்பப்பட்டவர்களே பிரிந்து கிடக்கிறார்கள் என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

நான் ஒரு ஹதீஸை ஒரு புத்தகத்தில் படிக்கிறேன் என்று வையுங்கள், அந்த ஹதீஸை பற்றிய ஆதாரங்கள் மற்றும் நம்பகத்தன்மை எனக்கு தேவைப்படாத பட்சத்தில் நான் ஏற்றுக் கொண்டு எழுதி விடுவது என் சார்பு நிலை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் போய் தேடி பாருங்கள், உங்களுக்காக நான் போய் தேடிக் கொண்டிருக்க முடியாது, அவ்வாறு நீங்கள் தேடி எந்த கிதாபிலும் இல்லை என்று சொன்னால் அதை நான் நிச்சயமாக வெளியிடுகிறேன், அவ்வளவு தான் செய்ய முடியும்.

கடைசியாக நீங்கள் எழுதியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை, என்னால் அனுதாபப் படத்தான் முடியும்,

"தன்னை அறிந்ததாக சொல்பவர்கள் இதைவிட வேறு கூடுதலாக வேறு என்ன அறிந்து வைத்துள்ளனர்? என்று கேட்டு சொல்கிறீர்களா? என்னைப் பற்றி இன்னும் கூடுதலாக அறிந்து கொள்ள எனக்கு உதவும் அல்லவா?" -

- நீங்க நினைக்கிற மாதிரி "மூஸா மரைக்கார் வூட்ல ஒரு பொண்ணு இருக்குதான்னு கேட்டு சொல்லுங்க"ங்குற மாதிரியான செய்தி அல்ல இது கேட்டு உங்களிடம் சொல்வதற்கு, உங்களை அறிதல் என்பது ஒரு பயணம் மாதிரி, நீங்கள் பயணிக்க வேண்டும், இடையில் எவ்வளவோ இருக்கும், எத்தனையோ நடக்கும், நீங்கள் மூஸா நபியவர்கள் மாதிரி அதிகம் கேள்வி கேட்டீர்கள் என்றால் அது தான் நம் பிரிவதற்கான நேரம்

- தவிர, மேற்கண்டவாறு நீங்கள் எழுதியிருப்பது உண்மையிலேயே உங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அல்லது வேட்கை இருந்தால், நீங்கள் உங்களிடமே கேட்டு சொல்லுங்கள், உங்களுக்கான வழி இருக்கும் திசையை என்னால் காட்ட முடியும், அதற்கு உங்கள் கோப்பையை காலியாக்கி கொண்டு வாருங்கள், அது அல்லாமல் உங்கள் கோப்பை நிறைந்து இருந்தால் நான் எதை ஊற்றினாலும் வெளியே தான் ஓடும், உங்களுக்கு பயன்படாது, எனக்கும் பயன்படாது. பயன்படாத காரியங்களில் ஈடுபட நான் இப்போது தயாராக இல்லை.

வஸ்ஸலாம்
நாகூர் இஸ்மாயில்
வ அலைக்குமுஸ்ஸலாம்
தாங்கள் விட்ட இடத்திலிருந்து நான் தொடங்குகிறேன்.
//அதற்கு உங்கள் கோப்பையை காலியாக்கி கொண்டு வாருங்கள், அது அல்லாமல் உங்கள் கோப்பை நிறைந்து இருந்தால் நான் எதை ஊற்றினாலும் வெளியே தான் ஓடும், உங்களுக்கு பயன்படாது,//
எனது கோப்பை மதுரமான குர்ஆன் ஹதீஸ் என்னும் பழச்சாற்றால் நிரம்பியிருக்கிறது. அதில் வேறெதையும் ஊற்ற நான் தயாரில்லை.
//நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விளங்கி விட்டது (i know where you came from),//
தங்களுக்கு இப்போது தான் விளங்கியிருக்கிறது ஆனால் தாங்கள் யார் என்பது தங்களது 'தன்னை அறிந்தவன்........என்னும் வாசகங்களிலிலுருந்து அப்போதே எனக்கு விளங்கிவிட்டது.
//அதாவது நாகூரையும் அல்லாஹ் தான் படைச்சான், சொர்க்கத்தையும் அல்லாஹ் தான் படைச்சான், நான் வந்து அல்லாஹ் படைத்த ஒன்றை அவனே படைத்த இன்னொன்றை விட எனக்கு உசத்தி என்று தான் சொல்லியிருக்கிறேன், //
பிரச்சனைக்கு காரணமே இது தானே. அல்லாஹ் சொல்கிறான் தான் படைத்த சொர்க்கம் தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்று தாங்கள் சொல்கிறீர்கள். அதைவிட நாகூர் உயர்ந்தது என்று. தாங்கள் என்னுடன் மோதவில்லை.அல்லாஹ்வுடன் மோதுகிறீர்கள். 'தன்னில் தானே தானானான்' என்று தங்களைப் போன்றவர்கள் தத்துவத்தில் தான் குழப்புவார்கள் தாங்களோ தங்கள் எழுத்திலேயே குழப்பியிருக்கிறீர்கள்.
ஆதாரத்தை எடுத்துவைக்கும் விஷயத்தில் தங்கள் நியாயம் சரிதனா? என்பதை தாங்களே தனியாக உட்கார்ந்து சிந்தித்துப்பாருங்கள்.
நாகூர் இஸ்மாயீல் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார் என்று நான் சொல்கிறேன் என்றால் அதற்கான ஆதாரத்தை நான் தான் நிரூபிக்க வேண்டும். 'நீங்கள் சொல்லவில்லை என்பதை நான் எப்படி நிரூபிக்கமுடியும்? தொடக்கப்பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரிந்த இந்த சாதாரண தத்துவம் தங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.
என்னைப் பற்றி நான் அறிந்த விபரங்களை நான் சொல்லிவிட்டேன். இதைவிட கூடுதலாக தாங்கள் தங்களைப் பற்றி என்ன அறிந்து கொண்டீர்கள் என்பதை தாங்கள் சொல்லவே இல்லை.
நீண்ட பயணம் என்று சொன்ன நீங்கள் அந்தப்பயணத்தில் எதுவரை சென்றிருக்கிறீர்கள்?
அணண்ல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த தெளிவான பாதை நம் முன்னே இருக்கிறது.வாருங்கள் அந்த தெளிவான பாதையில் பீடுநடை போடுவோம்.
nagoreismail said…
அடடா..! என்னை தொவைச்சு காய போடாம விட மாட்டீங்க போலிருக்குதே..!

"எனது கோப்பை மதுரமான குர்ஆன் ஹதீஸ் என்னும் பழச்சாற்றால் நிரம்பியிருக்கிறது. அதில் வேறெதையும் ஊற்ற நான் தயாரில்லை"

- நீங்கள் தானே கேட்டு சொல்லுங்கள் என்று எழுதியிருந்தீர்கள் - (வேறு கூடுதலாக வேறு என்ன அறிந்து வைத்துள்ளனர்? என்று கேட்டு சொல்கிறீர்களா?)- அதான் அப்படி எழுதுனேன், ஏன் சார் மொதோ ஒரு மாதிரி இப்ப ஒரு மாதிரி பேசுகிறீர்கள்..?

"தங்களுக்கு இப்போது தான் விளங்கியிருக்கிறது ஆனால் தாங்கள் யார் என்பது தங்களது 'தன்னை அறிந்தவன்........என்னும் வாசகங்களிலிலுருந்து அப்போதே எனக்கு விளங்கிவிட்டது."

- இல்லையா பின்னே, நீங்கள் யாரு..? உங்களுக்கு தான் உங்க பெயர், பெற்றோர், குடும்பம், முகவரி, வயது, பிறந்த தேதி, எடை, உயரம், நிறம் எல்லாம் தெரியும் வேறு என்ன கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று எழுதிய மகானாச்சே நீங்கள்..!!??

"அல்லாஹ் சொல்கிறான் தான் படைத்த சொர்க்கம் தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்று தாங்கள் சொல்கிறீர்கள். அதைவிட நாகூர் உயர்ந்தது என்று. தாங்கள் என்னுடன் மோதவில்லை.அல்லாஹ்வுடன் மோதுகிறீர்கள்."
- எங்க வாப்பா எனக்கு ஒரு கடிகாரம் தந்தார்கள், நான் பெற்றுக் கொண்டேன், அப்புறம் எங்க வாப்பா சொன்னார்கள், நீ நல்லா படிச்சி நல்லா ஓதுனீன்னா ஒனக்கு ஒரு சாமான் வச்சிருக்கேன், அது விலை ஒசத்தி, ஜெர்மனில வாங்குனது, கண்ணை பறிக்கும் சாமான், பாத்தீன்னா ரொம்ப புடிச்சு போயிடும்' என்று எல்லாம் சொன்னார்கள்.

நானும் வாப்பா சொன்ன மாதிரி படிச்சி ஓதி வாப்பாட்ட வந்த போது எனக்கு அந்த அழகிய வைர மோதிரத்தை தந்தார்கள்.

நான் சொன்னேன், எனக்கு இந்த மோதிரத்தை விட அந்த வாட்ச் எனக்கு பிடித்திருக்கிறது என்று.
நான் எங்க வாப்பாவோடு மோதுகிறேனா..?

எங்க வாப்பா என்ன உச்சி மோந்து முத்தமிட்டாஹா. அதோடு அதை விட்டுட்டாஹா.. அந்த வார்த்தைய புடிச்சுட்டு தொங்கலை.. எங்க வாப்பாக்கு என்னை புரிந்திருக்கிறது.

இப்ப நீங்க தான் எனக்கும் எங்க வாப்பாக்கும் வம்பை வளர்த்து விடுகிறீர்கள்..? ஏன் சார், இந்த மாதிரி..? என்ன ஏதாவது புரியுதா..? அல்லது புரிந்த மாதிரியாவது இருக்கா..?

"'தன்னில் தானே தானானான்' என்று தங்களைப் போன்றவர்கள் தத்துவத்தில் தான் குழப்புவார்கள் தாங்களோ தங்கள் எழுத்திலேயே குழப்பியிருக்கிறீர்கள்."

- ஒரே குழப்பமா இருக்கே..?

"ஆதாரத்தை எடுத்துவைக்கும் விஷயத்தில் தங்கள் நியாயம் சரிதனா? என்பதை தாங்களே தனியாக உட்கார்ந்து சிந்தித்துப்பாருங்கள்."

- நான் எப்போதுமே தனியாக தான் சிந்தித்து பார்ப்பேன், எந்த கேஸட், விண் டிவி இப்படி எதுவும் பார்ப்பது கிடையாது

"நாகூர் இஸ்மாயீல் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார் என்று நான் சொல்கிறேன் என்றால் அதற்கான ஆதாரத்தை நான் தான் நிரூபிக்க வேண்டும். 'நீங்கள் சொல்லவில்லை என்பதை நான் எப்படி நிரூபிக்கமுடியும்? தொடக்கப்பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரிந்த இந்த சாதாரண தத்துவம் தங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான்."

- நாகூர் இஸ்மாயில் சொன்னார்ன்னு நீங்கள் ஏன் சார் இன்னொருத்தர்ட்ட போய் சொல்றீங்க நான் உங்கள்ட்ட தானே சொல்றேன், அடுத்தவங்கட்ட போய் சொல்லுங்கன்னு சொன்னேனா, பாருங்க இப்ப எவ்வளவு பிரச்சினைன்னு..? - ok ok jokes apart - விஷயத்திற்கு வருகிறேன், உண்மையிலேயே நீங்க என்னா சொல்றீங்கன்னு எனக்கு புரியவே இல்லை மஸ்டூகா சார், நான் ஒரு ஹதீஸை ஒரு புத்தகத்தில் படிக்கிறேன், அதை நான் நம்புவதற்கு நான் யாரிடம் போய் நிரூபிக்க வேண்டும்..? நான் ஏன் நீருபிக்க வேண்டும்..?

"என்னைப் பற்றி நான் அறிந்த விபரங்களை நான் சொல்லிவிட்டேன். இதைவிட கூடுதலாக தாங்கள் தங்களைப் பற்றி என்ன அறிந்து கொண்டீர்கள் என்பதை தாங்கள் சொல்லவே இல்லை."

- உங்களை பற்றி சில கேள்விகள்,

உங்க முதுகுல எத்தனை தண்டு வடம் இருக்கிறது?

ஒரு நாளைக்கு உங்க காதுல எத்தனை டெஸி பெல் வரைக்கும் கேக்க முடியும்?

இன்னைக்கு உங்க கண்ணு முழியை எத்தனை தடவை அசைத்தீர்கள்..?

உங்க உடம்புல எத்தனை சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது?

ஒரு நாளைக்கு எத்தனை தடவை மூத்திரம் பேய்வது உங்க உடம்புக்கு நல்லது?

- இந்த கேள்வி எல்லாம் சும்மா டிரைலர் தான், மெயின் பிச்சர் இன்னும் எவ்வளவோ இருக்கு..?

மேலே உள்ள ஒரு கேள்விக்காச்சும் உங்களால் சரியான பதிலை சொல்ல முடியவில்லை என்றாலும் உங்களை பற்றி நீங்கள் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள வில்லை என்று அர்த்தம்..!

"இதை எல்லாம் நான் அறிந்திருக்க நான் என்ன டாக்டரா?" என்று உங்களுக்கு கேள்வி கேட்க தோன்றினால் உங்களுடன் விவாதத்தை தொடர எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.

"என்னை பற்றி நான் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள வில்லை" என்று உங்களுக்கு தோன்றினால் உங்களை பாராட்டலாம்

"என்னை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது, அல்லாஹ் எனக்குள் எத்தனையோ அருட்கொடைகளை வைத்திருக்கிறான், அதை எல்லாம் அறியாதது மட்டுமல்ல விரயப் படுத்தி கொண்டிருக்கிறேன்" என்று தோன்றினால் உங்களை நேரில் சந்தித்து பேச ஆசைப் படுவேன்.

"நீண்ட பயணம் என்று சொன்ன நீங்கள் அந்தப்பயணத்தில் எதுவரை சென்றிருக்கிறீர்கள்?"

- இப்போது தான் நடை பயின்று கொண்டிருக்கிறேன், என் கால்களை தயார் படுத்தி கொண்டிருக்கிறேன்,

"அணண்ல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த தெளிவான பாதை நம் முன்னே இருக்கிறது.வாருங்கள் அந்த தெளிவான பாதையில் பீடுநடை போடுவோம்"

- இந்த இடத்தில் "இன்ஷா அல்லாஹ்" என்று சொல்ல வேண்டும், அல்லாஹ் அல்லாஹ் இப்ப தெய்வ குத்தம் ஆகி போச்சே.. (இதற்கு ஆதாரம்..!!!!!?????)
//அடடா..! என்னை தொவைச்சு காய போடாம விட மாட்டீங்க போலிருக்குதே..! //
வார்த்தைகள் கோபத்தின் வெளிப்பாடா?, அல்லது இயலாமையின் வெளிப்பாடா? தெரியவில்லை இருந்தாலும் உங்கள் நகைச்சுவை உணர்வை ரசித்தேன்.
பொறுமையாக ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதும் உங்கள் பொறுப்புணர்வை மதிக்கிறேன்.
போதும்! போதும் சட்டுபுட்டுன்னு சொல்லவந்ததை சொல்லுன்னு நீங்கள் சொல்வது கேட்கிறது.
வாப்பா வாங்கிக் கொடுத்த கடிகாரம்,மோதிரம் கதையைச் சொன்னீர்கள். வாப்பாவுக்கும் மகனுக்கும் நான் எங்கே வம்பை வளர்த்தேன். நீங்கள் தான் வாப்பா பேச்சை நான் கேட்கமாட்டேன். நான் என்ன முடிவு செய்து விட்டேனோ அது தான் சரிஎன்று
என்ன புரியவில்லையா? சரி நேராகவே சொல்கிறேன். அல்லாஹ் தான் சொல்கிறான் நாகூரைவிடவும் இந்த நானிலத்தைவிடவும் உனக்காக தயாரித்து வைத்திருக்கும் சொர்க்கம் உயர்வானது, அகிலம் அனைத்தும் (நாகூர் அமைந்துள்ள இந்த உலகம் உட்பட) ஒரு நாள் அழிந்து விடும் என்றென்றும் ஊழியூழி காலம் அழியாமல் நிலைத்திருக்கும் அந்த சொர்க்கம் தான் உயர்ந்தது அங்கே உனக்கு இடம் அளிப்பேன் என்று அல்லாஹ்வே சொல்லும்போது அவனை மறுத்து எனக்கு சொர்க்கம் வேண்டாம் நாகூரே போதும் எனத் தாங்கள் சொல்லி அடம் பிடிக்கிறீர்கள்.
வாப்பா மகன், மோதிரம் கடிகாரம் உதாரணம் உங்கள் எழுத்துத் திறமையை வேண்டுமானால் பறைசாற்றலாம் அல்லாஹ்வுடன் நேரடியாக மோதும் என்பதை மறக்காதீர்கள். அறியாமல் நீங்கள் சொன்னதை அல்லாஹ் மன்னிப்பானாக.
--------------
என்னைப் பற்றி நான் அறிந்தவற்றை உங்களிடம் சொன்னேன். டிரலைர் மெயின் பிக்ஸர் என்று 'ரீல்' காட்டியிருக்கிறீர்கள். என்னைப் பற்றி நான் என்ன தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமோ அதை மட்டும் தான் நான் தெரிந்து வைத்துக் கொள்ள முடியும். இவை போக, உடல் நிலை சரியில்லாமல் டாக்டரிடம் போகும்போது டாகட்ரிடம் தெரிவிக்க வேண்டிய விபரங்களான எனது சர்க்கரை அளவு இரத்த அழுத்த அளவு ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன். நீங்கள் டாகடர் அல்ல என்பதால் உங்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாதவற்றை விட்டுவிட்டேன். நீங்கள் கேட்ட எனது தண்டுவடம், காதின் கேட்கும் டெசிபல் அளவு, சிறுநீர் கழிக்க வேண்டிய அளவு இவை எல்லாம் எனக்கு மட்டும் உரியதல்லவே. அனைத்து மனிதருக்கும் பொதுவானதை ஏன் 'தன்னை அறிந்து கொள்ளுதல்" என்னும் தத்துவத்தில் சேர்க்கிறீர்கள்?
-------------------------------
//நாகூர் இஸ்மாயில் சொன்னார்ன்னு நீங்கள் ஏன் சார் இன்னொருத்தர்ட்ட போய் சொல்றீங்க நான் உங்கள்ட்ட தானே சொல்றேன், அடுத்தவங்கட்ட போய் சொல்லுங்கன்னு சொன்னேனா, பாருங்க இப்ப எவ்வளவு பிரச்சினைன்னு..? - ok ok jokes apart - //
உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்களே இஸ்மாயீல் நானா? இஹ ஒன்னையும் விடமாட்டாஹ போல இருக்கே என்று நீங்கள் புலம்புவது எனக்கு கேட்கிறது நானா.
நபிகள் நாயகம் சொன்னர்கள் என்று நீங்கதானே எல்லார்கிட்டயும் போய் சொல்றீங்க. அதாவது உங்கள் பதிவின் முகப்புப் பக்கத்தில் போட்டிருக்கீங்க. அப்துல் காதர் சொன்னார் அல்லாப்பிச்சை சொன்னார் என்று நீங்க போட்டிருந்தீங்கன்னா நான் இப்படி கேட்கவேண்டிய அவசியமே வந்திருக்காது.உங்களுக்கும் எனக்கும் தலைவராகிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நீங்கள் போட்தால் தானே உங்களுடைய ஒரு முஸ்லிம் சகோரனாகிய எனக்கு அவர்கள் எப்ப சொன்னாங்க? யார்கிட்ட் சொன்னாங்க என்று கேட்கவேண்டி வந்தது.
ஏனென்றால் நபித்துவத்திலிருந்து அவர்கள் இறப்பெய்தும் வரை அவர்கள் பேசிய ஒவ்வொரு பேச்சும் அணுஅணுவாக ஆராயப்பட்டு ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறதே. அவர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாக யாரும் சொல்லிவடக்கூடாது என்ற கவலையில் தானே கேட்கிறேன்.
உண்மையில் அவர்கள் சொன்ன வாசகம் அது என்று எனக்குத் தெரிந்து விட்டால் உங்களைப்போல் நான் விடப்பிடியாக இருக்கமாட்டேன். நம் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கூற்றை உங்களுடன் சேர்ந்து நானும் உரத்த குரலில் முழங்கத் தயாராக இருக்கிறேன்.
கவனக்குறைவாகவோ அல்லது கேள்விப்பட்டதை வைத்தோ தாங்கள் எழுதிவிட்டீர்கள். ஆதாரம் உங்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம் அது தவறல்ல. ஆனால் இவ்வளவு பெரிய விவாத்திற்கு வரிந்து கட்டிக் கொண்டு தயாராகும் தாங்கள் இதுவரை யாரிடமாவது இதற்கான ஆதாரத்தைக் கேட்டு வெளியிட்டிருந்தால் தங்கள் அந்தஸ்து உயர்ந்திருக்கும்.
அல்லது குறைந்த பட்சம்
'நான் நபி மொழி எனக் கேள்விப்பட்டதால் வெளியிட்டுவிட்டேன். என்னை விடச் சிறந்த அறிஞர் பெருமக்களிடம் கேட்டு சொல்கிறேன்' என்றாவது போட்டிருந்தால் உங்கள் பெருந்தன்மையையும் தன்னடக்கத்தையும் வாசகர்கள் பாரட்டுவார்கள்.
//'என்னைப் பற்றி யார் வேண்டுமென்றே பொய்யை இட்டுக்கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்' (அறிவிப்பவர்: அபூஹ+ரைரா ரலி ஆதாரம்: புகாரி)//
தாங்கள் குற்றவாளி ஆகமாட்டீர்கள்.
ஏனெனில் இந்த நபி மொழியின் மூலத்தில் கூட 'முதஅம்மிதன்' என்று அதாவது 'வேண்டுமென்றே' என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது. நிச்சயமாகத் தாங்கள் வேண்டுமென்றே இத்தவறைச் செய்யமாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
------------------
nagoreismail said…
"போதும்! போதும் சட்டுபுட்டுன்னு சொல்லவந்ததை சொல்லுன்னு நீங்கள் சொல்வது கேட்கிறது"

- நீங்க பெரிய ஆள் சார், உண்மையிலேயே இப்படி தான் நினைச்சேன்

"அவனை மறுத்து எனக்கு சொர்க்கம் வேண்டாம் நாகூரே போதும் எனத் தாங்கள் சொல்லி அடம் பிடிக்கிறீர்கள்"

- நான் எழுதியிருந்ததை மீண்டும் படித்து பாருங்கள், நான் தான் "மோதிரத்தை" வாங்கி கொண்டேனே

"அனைத்து மனிதருக்கும் பொதுவானதை ஏன் 'தன்னை அறிந்து கொள்ளுதல்" என்னும் தத்துவத்தில் சேர்க்கிறீர்கள்?"

- நீங்க பெயர், முகவரி எல்லாவற்றையும் இதே தத்துவத்தில் தானே சேர்த்தீர்கள்

"இஹ ஒன்னையும் விடமாட்டாஹ போல இருக்கே என்று நீங்கள் புலம்புவது எனக்கு கேட்கிறது நானா"

- புலம்புறேன் தான், இஹ ஒன்னையும் விடமாட்டாஹா போல இருக்கே என்று அல்ல, "சாவடிக்கிறாரே என்னய..' என்று, (தயவு செய்து நான் சாகடிக்க முடியாது, அதுக்கு இஸ்ராயீல் தான் வரணும், ஆதாரம் இருக்கான்னு கேட்டு வைக்காதீங்க ப்ளீஸ்)

"அதாவது உங்கள் பதிவின் முகப்புப் பக்கத்தில் போட்டிருக்கீங்க"

- பதிவின் முகப்பு பக்கத்தில் எதை போட வேண்டும் என்று தோன்றியதோ அதை போட்டிருக்கேன், எப்படி நீங்கள் மருத்துவரிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் என்னிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதோ அதை போல

"உங்களுக்கும் எனக்கும் தலைவராகிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நீங்கள் போட்தால் தானே உங்களுடைய ஒரு முஸ்லிம் சகோரனாகிய எனக்கு அவர்கள் எப்ப சொன்னாங்க? யார்கிட்ட் சொன்னாங்க என்று கேட்கவேண்டி வந்தது"

- நீங்கள் முதலில் இப்படி கேக்கவே இல்லை, நீங்கள் எழுதிய முதல் பின்னூட்டத்தில் ஒரு நபிமொழியை குறிப்பிடுவதாக இருந்தால் இது இதெல்லாம் இருக்க வேண்டும் என்று எனக்கு வலியுறித்தி இருந்தீர்கள். நபிமொழி பற்றி எழுதும் போது புகாரி, முஸ்லீம் திர்மிதி இப்படி புத்தகத்தின் பேரையும் எழுத வேண்டும் என்று எந்த ஹதீஸில் இருக்கு..?
தவிர, நான் படித்த என் நினைவில் இருக்கும் ஒன்றை எழுதியிருக்கிறேன், நான் எந்த புத்தகத்தில் படித்தேன், எப்போது படித்தேன், அறிவிப்பாளர் யார் என்று எல்லாம் எனக்கு நினைவில் இல்லை. அதுவும் தவிர, முன்னர் எல்லாம் புத்தகம் வரும் போது அறிவிப்பாளர் பெயர், கிதாபின் பெயர் எல்லாம் போட்டு வராது என்றே எண்ணுகிறேன். இப்பொழுது தான் அந்த தேவை வந்திருக்கிறது, ஏன் என்றால் இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் இதை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன் என்று ஹதீஸ்கள் எழுதி வைக்கப்பட்ட கிதாப்களில் நம்பகத்தன்மையில் ஐயம் ஏற்பட்டதால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கிறது. அதிலும் கூட அறிஞர்களுக்கு இடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்த வண்ணம் உள்ளன. அதை ஒட்டி அறிஞர்களுக்கு மத்தியில் நடக்கும் விவாதங்கள் (?) எல்லாம் என் போன்ற பாமரர்களுக்கு நல்ல காட்சியாக (ரீல்..! நன்றி மஸ்டூகா (வார்த்தைக்கு மட்டும்)) இருந்து வந்து கொண்டிருக்கிறது என்பது வேறு செய்தி

"இவ்வளவு பெரிய விவாத்திற்கு வரிந்து கட்டிக் கொண்டு தயாராகும் தாங்கள் இதுவரை யாரிடமாவது இதற்கான ஆதாரத்தைக் கேட்டு வெளியிட்டிருந்தால் தங்கள் அந்தஸ்து உயர்ந்திருக்கும்"

"...என்றாவது போட்டிருந்தால் உங்கள் பெருந்தன்மையையும் தன்னடக்கத்தையும் வாசகர்கள் பாரட்டுவார்கள்"

- இப்ப என் அந்தஸ்து குறைந்து வாசகர்களின் பாராட்டும் கிடைக்காமல் போனதை என்ன அழகாக எழுதியிருக்கிறீர்கள். சார், என் அந்தஸ்து, பாராட்டு எல்லாம் என் இறைவனிடத்தில் இருக்கிறது

"இந்த நபி மொழியின் மூலத்தில் கூட 'முதஅம்மிதன்' என்று அதாவது 'வேண்டுமென்றே' என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது. நிச்சயமாகத் தாங்கள் வேண்டுமென்றே இத்தவறைச் செய்யமாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்"

- நன்றாக தெரியுமா?, அப்ப நீங்க தான் எனக்காக சாட்சி சொல்லணும், சாட்சி சொல்ல மறுக்கவும் கூடாது, அது பாவம், அப்புறம் சொர்க்கத்துல நீங்க இல்லாம எப்படி..?

கடைசியாக, இதற்கு பிறகு நீங்கள் எழுதும் மறுமொழிக்கு நான் வரிந்து கட்டிக் கொண்டு விவாதத்திற்கு வர மாட்டேன், நீங்கள் தான் வெற்றி பெற்றீர்கள், ஆனால் கோப்பை எனக்கு தான், ஏன்னா நீங்கள் ஒரு பெரிய அறிஞரிடம் வெற்றி பெற்றிருந்தீர்கள் என்றால் நானே என் தலைமையில் விழா எடுத்திருப்பேன், ஆனா நீங்க அடிச்சது ஒரு புள்ள பூச்சிய.. (நான் தாங்க.. அது!)

ஆமா சட்டுபுட்டுன்னு சொல்ல வந்தத சொல்லுன்னு நான் சொல்றது உங்களுக்கு கேட்டதாகவும், இஹ ஒன்னையும் விடமாட்டாஹ போல இருக்கே என்று நான் புலம்புவதும் உங்களுக்கு கேட்பதாகவும் சொல்றீங்களே இது உண்மையா? பொய்யா? இல்லை சும்மா எழுத்து சுவைக்காகவா?
அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக. என்றென்றைக்கும் நிரந்தரமான சொர்க்கத்தில் நம் அனைவரையும் சேர்த்து வைப்பானாக.தொடர்ந்து நாகரிகமாகவும் நளினமாகவும் பதில் தந்தமைக்கு நனறி. எமது பிற பதிவுகளை தங்களுக்கு வசதிபடும்போது பார்வையிடுங்கள்.
தங்களுக்கும் தங்களைச்சார்ந்தோர் அனைவருக்கும் எமது அன்பான ஸலாம் உரித்தாகட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
www.masdooka.blogspot.com
www.masdooka.wordpress.com
இறைவா! உண்மையை உண்மையென எங்களுக்குக் காண்பித்துத் தந்து அதைப் பின்பற்றி ஓங்கவும், பொய்யை பொய்யென காண்பித்துத் தந்து அதைவிட்டு நீங்கவும் எங்களுக்கு அருள் புரிவாயாக.
nagoreismail said…
This comment has been removed by the author.
nagoreismail said…
நன்றி மஸ்டூகா,

எனக்கும் உங்களுக்கு ஆயிரத்தி சொச்சம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இணையும் புள்ளிகளும் இருக்கவே செய்யும் என்று நம்புகிறேன்.

"எமது பிற பதிவுகளை தங்களுக்கு வசதிபடும்போது பார்வையிடுங்கள்"

- நீங்கள் முதல் பின்னூட்டம் எழுதிய போதே நான் பார்த்து விட்டேன், நிறைய எழுதுங்கள், என் அன்பான வாழ்த்துகள். விவாதம் என்று இல்லாமல் மனம் ஒப்புவதை எழுதுவோம், மாற்று கருத்துக்கு மரியாதை அளிப்போம். நம்முடைய வேலை எடுத்து சொல்வது மட்டும் தான், "And our duty is only plain delivery of the Message", இல்லையா..?

"தங்களுக்கும் தங்களைச்சார்ந்தோர் அனைவருக்கும் எமது அன்பான ஸலாம் உரித்தாகட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்."

- மெத்த மகிழ்ச்சி, இது போல் உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் சலாமலைக்கும்
nagoreismail said…
Thanks Mr. Bava Shareef

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்